India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மேற்குவங்க அரசு தரப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரம் தனக்கே இருப்பதாக சிபிஐ கூறுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம், ராணுவத்தினர் முகாமில் குற்றமிழைத்தாலும் மாநில போலீசிடமே ஒப்படைக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.

மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ், பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பெண்ணிடம் அவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகாரிகா கோஸ் தனது எக்ஸ் பக்கப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் 2 பேர் அரைசதம் அடித்தனர். முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். நிதிஷ்குமார் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரிகள், 8 சிக்சர்களும் அடங்கும்.

தமிழகத்தில் உள்ள 11,113 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 8030 தொடக்கப் பள்ளிகளிலும், 3083 நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்தி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொன்னதையே திரும்பத் திரும்ப பாஜக சொல்வதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், பாஜகவிடம் பேச எந்த விசயமும் இல்லாததால், சொன்னதையே திரும்பச் சொல்வதாகக் குற்றம்சாட்டினார். 3,000 பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த தேஜஸ்வி, ஆனால் பிரதமர் மோடியோ பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை வெளிப்படையாக ஆதரிப்பதாகவும் கூறினார்.

ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த SRH, அதிரடியாக விளையாடியது. டிராவிஸ் ஹெட் 58, நிதிஷ் குமார் 76, க்ளாசென் 42 ரன்கள் குவித்ததால் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை SRH குவித்தது. RR தரப்பில் ஆவேஷ் கான் 2, சந்தீப் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

14 கோடி மைல்கள் தொலைவுக்கு அப்பால் இருந்து பூமிக்கு லேசர் சிக்னல் வந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு ‘சைக்கி’ என்ற் விண்கலத்தை அனுப்பிய நாசா, அதனை செவ்வாய் – வியாழனுக்கு இடையே நிலை நிறுத்தி லேசர் பரிமாற்றத்தை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில், இந்த லேசர் சிக்னல் கிடைத்ததாகக் கூறியுள்ள விஞ்ஞானிகள், விண்வெளி ஆராய்ச்சில் இதனை ஒரு சாதனையாக கருதுகின்றனர்.

சேலம் தீவட்டிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதால், அங்குப் பதற்றம் நிலவுகிறது. கோயிலுக்குள் ஒரு தரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கோயில் அருகே உள்ள கடைகள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து நிகழ்விடத்தில் குவிக்கப்பட்ட போலீசார், 17 பேரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருப்பதாகவும், அதில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் விஷால் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு காவல்துறை அதிகாரியாக அண்ணாமலை இருந்தார். இந்தப் பின்னணியை வைத்துப் படம் எடுக்கப்பட இருப்பதாகவும், இதில் விஷால் நடிக்க இருப்பதாகவும் பரவி வரும் தகவல் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

சென்னையில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்துள்ளது போக்குவரத்துக் காவல்துறை. இதில் 121 போலீஸ் வாகனங்களும் அடக்கம். முதல்நாளில் பிடிபட்டோருக்கு ரூ.500 அபராதம் விதித்து அறிவுரை வழங்கிய போலீசார், அடுத்த முறை பிடிபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படுமென எச்சரித்து அனுப்பினர். வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை இன்று அமலுக்கு வந்தது.
Sorry, no posts matched your criteria.