News May 2, 2024

சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்குட்பட்டது

image

சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மேற்குவங்க அரசு தரப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரம் தனக்கே இருப்பதாக சிபிஐ கூறுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம், ராணுவத்தினர் முகாமில் குற்றமிழைத்தாலும் மாநில போலீசிடமே ஒப்படைக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.

Similar News

News December 17, 2025

மோடி ஒரு சிறந்த நண்பர்: டிரம்ப்

image

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவையும் PM மோடியையும் புகழ்ந்துள்ளார். இதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்துள்ளது. அதில், ‘இந்தியா உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். இது அற்புதமான நாடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு முக்கியமான கூட்டு நாடு. PM மோடி எங்களுக்கு சிறந்த நண்பராக இருக்குறார்’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News December 17, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (டிச.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News December 17, 2025

சேப்பாக்கத்தில் சீற காத்திருக்கும் இளம் சிங்கங்கள்

image

வழக்கமாக ஏலத்தில் அனுபவ வீரர்களை தேடும் சென்னை அணி இம்முறை இளம் வீரர்களுக்கு கோடிகளை கொட்டியுள்ளது. அந்தவகையில் பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா ஆகியோரை தலா ₹14.20 கோடிகள் கொடுத்து எடுத்துள்ளது. அதை தவிர அமன் கான்(₹40 லட்சம்), சர்பராஸ் கான்(₹75 லட்சம்), ஜாக் ஃபோல்க்ஸ்(₹75 லட்சம்), மேத்யூ ஷார்ட்(₹1.50 கோடி), அகேல் ஹோசெயின்(₹2 கோடி), மேட் ஹென்ரி (₹2 கோடி) ஆகியோரையும் CSK தட்டி தூக்கியுள்ளது.

error: Content is protected !!