India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1999ஆம் ஆண்டுக்குப் பின் ‘காந்தி’ குடும்பத்தினர் அமேதி தொகுதியில் போட்டியிடாமல் தவிர்ப்பது இதுவே முதல் முறை. 1999ஆம் ஆண்டு அத்தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். பின்னர், தொடர்ந்து 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.2019ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியைத் தழுவியதால் இந்த முறை அங்கு போட்டியிடவில்லை. இதனால், அமேதி காந்தி குடும்பத்தின் கையை விட்டுப் போகிறது

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணியை எதிர்த்து, அவரது தந்தை பெயர் கொண்ட வேறொருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். லாலு மகள் ரோகிணி சரண் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜன்சம்பவனா கட்சியின் சார்பாக லாலு பிரசாத் யாதவ் என்பவர் போட்டியிடுகிறார். இவர், குடியரசுத் தலைவர் தேர்தல் உள்பட பல தேர்தல்களில் போட்டியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் பயிர்க் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே முடிவுகள் வெளியாகும். அனுமதி கிடைக்க தாமதமானால், தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவு இந்தியாவில் இல்லை என மூத்த மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவிஷீல்டு பக்க விளைவு 0.002% பேருக்கு மட்டுமே சாத்தியம் உள்ளதாகக் கூறிய அவர், வெளிநாடுகளில் மட்டுமே சிலருக்கு பக்க விளைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ‘2021-2023’ வரையிலான காலகட்டத்தில் 18-45 வயதிற்கு உட்பட்டவர்களின் திடீர் இறப்புகள் குறித்து ICMR ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

சாம்பியன் டிராஃபி போட்டிகளில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு அருகில் லாகூர் இருப்பதால் அந்த மைதானம் பரிசீலக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில், அந்நாடு இந்த ஏற்பாட்டை செய்து வருகிறது. இந்த தொடர் அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிலும் வெப்பம் அதிகரிப்பால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 20% விடுதிகள் மூடப்பட்டுள்ளன. செயல்படும் விடுதிகளிலும் 40% முதல் 60% வரை வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காகச் சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவைத் திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாயச் சங்கிலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின் உடலை அவரது பெற்றோர் 8 கிமீ தேடி அலைந்தனர். இது தொடர்பாக RDO விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கிய ‘ஆவேஷம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபகத் பாசில், சஜின் கோபு, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, “இலுமினாட்டி…” பாடல் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படம் வரும் 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச் சின்னமாகவும் இது போற்றப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு “லிங்கன் புக் ஆஃப்” ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.