News May 3, 2024
திடீர் மரணத்திற்கு காரணம் என்ன?

கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவு இந்தியாவில் இல்லை என மூத்த மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவிஷீல்டு பக்க விளைவு 0.002% பேருக்கு மட்டுமே சாத்தியம் உள்ளதாகக் கூறிய அவர், வெளிநாடுகளில் மட்டுமே சிலருக்கு பக்க விளைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ‘2021-2023’ வரையிலான காலகட்டத்தில் 18-45 வயதிற்கு உட்பட்டவர்களின் திடீர் இறப்புகள் குறித்து ICMR ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
Similar News
News November 11, 2025
BIHAR EXIT POLL: தேஜஸ்விக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு(NDA) சாதகமாகவே உள்ளன. MATRIZE-IANS உடன் இணைந்து ABP நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDA-வுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 147 முதல் 167 இடங்களை வெல்லும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்கள், மற்றவை 0-7 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
EXIT POLL: பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்பது யார்?

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. Gyaan Ka Bhandar India வெளியிட்டுள்ள சர்வேப்படி, NDA: 165-175, MGB: 65-70, மற்றவை: 3-10 இடங்கள் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. People’s Insight கருத்து கணிப்பு முடிவில் NDA: 133-148, MGB: 87-102, JSP: 0-2, மற்றவை: 3-6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
BIHAR EXIT POLL: மீண்டும் NDA ஆட்சி

பிஹாரில் மீண்டும் NDA ஆட்சி அமையும் என TIMES NOW சேனல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. Satta Bazaar-ன் முடிவுகளை மேற்கோள் காட்டி NDA கூட்டணி 135-140 தொகுதிகள், MGB கூட்டணி 100-115 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


