India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தான் வந்து விளையாடுவதில் இந்திய அணிக்கு என்ன பிரச்னை உள்ளது என பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் வரும் போது, இந்தியாவின் புறக்கணிப்பை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டார். அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக கலக்கக்கூடாது எனவும், அது இருநாட்டுக்கும் நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணை நேரில் சந்திக்க அவருடைய கட்சி அலுவலகத்திற்கு நிர்வாணமாக சென்ற பெண் அகோரி நாகசாதுவால் பதட்டம் ஏற்பட்டது. துணை முதல்வர் வெளியூர் சென்றுள்ளார் எனக் கூறி கட்சியினர் தன்னை ஏமாற்றுவதாக கூறி பெண் அகோரி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார். அவரை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். சில நாள்கள் முன்பு காளஹஸ்தி கோவிலுக்கும் அவர் நிர்வாணமாக சென்று சர்ச்சையில் சிக்கினார்.
‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற எண்ணம் மதிமுகவுக்கு கிடையாது என்று அக்கட்சி எம்பி துரை வைகோ கூறியுள்ளார். விசிக திமுக கூட்டணியில் தான் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், கூட்டணியை விட்டு திருமா வெளியே போய் விடுவார் என்று தான் நினைக்கவில்லை என்றார். ஆட்சியில் இடம்பெற மதிமுக விரும்பவில்லை என்றும், அதற்கான தேவை தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் லூசியானா மாகாணம் அல்மான்ஸ்டர் அவென்யூ பாலத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போன்று நியூ ஆர்லஸ் நகரில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவங்களையும் நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 46 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த சனி மற்றும் ஞாயிறு அன்று சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 3,531, ஆர்.கே. நகர் தொகுதியில் 3,187 பேரும் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்தனர். சிறப்பு முகாம் வருகிற 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெட்டிவேர் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும். வெட்டிவேர் தேய்த்து குளிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இது உடல் வெப்பத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், வறண்ட சருமத்தை சீராக்கி, மென்மையாக மாற்றுகிறது. வெட்டிவேர் உடலின் நச்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டதால் உடல் நலனை சீராக்குகிறது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்ஹன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் – என்2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கேப் கென்வரெல் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 4,700 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல் போலீசார் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல என தமிழிசை குறை கூறியுள்ளார். நடிகை கஸ்தூரி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு நிலையிலும், போலீசாரின் நடவடிக்கை பாரபட்சமாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தமிழகத்தில் நிறைய இருக்கும் நிலையில், அதில் காட்டாத அக்கறையை கஸ்தூரி விஷயத்தில் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் மார்ட்டின் வீட்டில் தொடந்து 3 நாள்கள் ED சோதனை நடத்தியது.
‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து, இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தணிக்கை சான்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் குறித்த தேதியில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி படம் வெளியாகும் என கங்கனா அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.