India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திராவில் NDA கூட்டணி ஆட்சியமைத்தால், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படுமென முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. கர்னூலில் நடந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு, அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார்.
இந்தியாவின் முன்னணி சோப் பவுடர் நிறுவனமான நிர்மா, ₹23,000 கோடிக்கும் மேல் வருவாய் கொண்டதாகும். குஜராத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மகனான கர்சன்பாய் படேல் என்பவரே ₹15,000 கடன் வாங்கி அதனை 1969இல் தொடங்கினார். முதலில் சைக்கிளில் சென்று நிர்மா பவுடரை விற்றார். பிறகு சிறிய ஆலையை ஏற்படுத்தி, கிலோ ₹15க்கு விற்றதால், நல்ல வரவேற்பு பெற்று ஆண்டுக்கு ₹7,000 கோடி லாபம் ஈட்டி நிர்மா சாதனை படைத்தது.
கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், 2ஆவது முறையாக விதியை மீறியதற்காக அவருடைய ஒரு நாள் ஊதியத்தையும் பிசிசிஐ அபராதமாக விதித்தது. ஐபிஎல் தொடரில் விதியை மீறியதற்காக வீரர் ஒருவருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது இந்த சீசனில் இதுவே முதல்முறை.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை செல்கிறார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியே அக்கோயிலை திறந்து வைத்தார். இதை வைத்து, பழங்குடியினர் என்பதால் அவர் அழைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்நிலையில் அயோத்திக்கு நாளை செல்லும் முர்மு, ஸ்ரீராமர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு நடத்தவுள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. லக்னோவில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு, ரோகித் சர்மா(4), சூர்யகுமார் யாதவ்(10), திலக் வர்மா(7), பாண்டியா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 7 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.
உடல்சூட்டைத் தணிக்க எண்ணெய் நீராடுவது பொதுவான வழக்கம். இப்படி எண்ணெய் நீராடல் மேற்கொள்வதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. உடல்வெப்பத்தை தணிக்க நாள்தோறும் எண்ணெய் நீராடக்கூடாது, அப்படி நீராடினால் குளிர் காய்ச்சல் போன்ற பின்விளைவு ஏற்படும். தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, நீண்ட நேரம் கழித்து நீராடக் கூடாது. அப்படி நீராடினால், காதுவலி, முகவீக்கம், சைனஸ் போன்றவை ஏற்படக்கூடும்.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தாஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுத் தேர்தலின்போது கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன் என்று வெள்ளியன்று நடைபெறும் அடுத்த விசாரணையில் ED பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற ஊட்டி, கொடைக்கானல் பகுதி வணிகர்கள் வலியுறுத்தினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மே 7 – ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்த தமிழக அரசுக்கு, ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறியுள்ள வணிகர்கள், அந்த அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியுள்ளனர்.
உலக அளவில் வெளியான சிறந்த 15 திரில்லர் படங்களாகக் கீழ்க்காண்பவற்றைக் கூறலாம். அவை என்னென்ன? * தி எக்சார்சிஸ்ட் * ஈவில் டெட் *சைக்கோ *டெக்சாஸ்: செயின் மசாக்கர் *தி சைலன்ஸ் ஆப் லேம்ப் * மெமன்டோ * ஷா *பிரைடே தி 13 * ஹாலோவீன் * வேகன்சி * எஸ்கேப் ரூம் * தெர்டின் கோஸ்ட் * நைட்மேர் ஆப் எல்ம் ஸ்ட்ரீட் * டோன்ட் ப்ரீத் * ஸ்க்ரீம் *
இரவில் பைக் ஓட்டுவோர் கண்ணைக் காக்கச் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் புகையால் கண் எரிச்சல் ஏற்படவும், பைக்கிலுள்ள லைட் வெளிச்சத்தைக் கண்டு வரும் பூச்சி கண்ணில் மோதி விழித்திரை காயமடையவும் வாய்ப்பு உள்ளது. பூச்சி வேகமாக மோதினால் பார்வை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கண்ணைக் காக்கக் கண்ணாடி அல்லது ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.
Sorry, no posts matched your criteria.