News April 30, 2024
ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 !

ஆந்திராவில் NDA கூட்டணி ஆட்சியமைத்தால், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படுமென முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. கர்னூலில் நடந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு, அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார்.
Similar News
News December 16, 2025
பாஜக முக்கிய தலைவர் மாரடைப்பால் காலமானார்

ராமஜென்மபூமி இயக்கத்தின் தலைவரும், பாஜகவின் EX MP-யுமான ராம்விலாஸ் வேதாந்தி(67) மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று அயோத்தியில் நடைபெறவுள்ளது. BJP, RSS-ன் முக்கிய தலைவராக இருந்த ராம்விலாஸ், அயோத்தி கோயிலை கட்டுவதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். மேலும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் செயல் தலைவராக பணியாற்றிய அவர், 2 முறை(1996, 1998) MP-யாக இருந்துள்ளார். #RIP
News December 16, 2025
தென் தமிழகத்தில் EPS போட்டியிடனும்: RB உதயகுமார்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் நேற்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதில், EPS-ஐ தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரி 349 மனுக்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென் தமிழகத்தில் EPS போட்டியிட வேண்டும் என RB உதயகுமார் விருப்பம் தெரிவித்துள்ளார். சேலத்தின் முகமாக உள்ள EPS, தென் தமிழகத்தில் நின்றால் எந்த தொகுதியில் போட்டியிடலாம்?
News December 16, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

இன்றும் பங்குச்சந்தைகள் இறங்குமுகத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 345 புள்ளிகள் சரிந்து 84,867 புள்ளிகளிலும், நிஃப்டி 100 புள்ளிகள் சரிந்து 25,927 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. அதேநேரம், வரலாற்றில் முதல்முறையாக டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ₹90.81 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் <<18578477>>தங்கம்<<>> பக்கம் திரும்பி வருகிறது.


