News April 30, 2024
இரவில் பைக் ஓட்டுவோர் கவனத்துக்கு

இரவில் பைக் ஓட்டுவோர் கண்ணைக் காக்கச் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் புகையால் கண் எரிச்சல் ஏற்படவும், பைக்கிலுள்ள லைட் வெளிச்சத்தைக் கண்டு வரும் பூச்சி கண்ணில் மோதி விழித்திரை காயமடையவும் வாய்ப்பு உள்ளது. பூச்சி வேகமாக மோதினால் பார்வை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கண்ணைக் காக்கக் கண்ணாடி அல்லது ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.
Similar News
News December 11, 2025
மழை மற்றும் குளிர்கால உணவுகள்

மழை மற்றும் குளிர்காலத்தில் உடல் சூட்டைத் தக்கவைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சூடான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. சில ஸ்நாக்ஸ் வகைகளையும் என்ஜாய் செய்யலாம். அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 11, 2025
முருங்கைக்காய் ஊறுகாய் ஸ்பெஷல் தெரியுமா?

முருங்கைக்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதேபோல், முருங்கைக்காய் ஊறுகாயும் எடுத்துக் கொண்டால் நோயெதிர்ப்பு சக்தி, ரத்த சோகை எதிர்ப்பு, இதய ஆரோக்கியம், சீரான செரிமானம் உள்ளிட்டவை கிடைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அரைகிலோ முருங்கைக்காயை தேவையான அளவில் வெட்டி, மாங்காய், மிளகாய்த்தூள் (காரத்திற்கேற்ப), உப்பு, நல்லெண்ணெய் என எப்போதும் போல் ஊறுகாய் செய்து கொள்ளலாம்.
News December 11, 2025
சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

திமுகவில் இணைந்த <<18530229>>பி.டி.செல்வகுமார்<<>> விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்தவர்களுக்கு, தவெகவில் உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற அவர், புதிதாக வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், விஜய் நிலவை போன்றவர்; குறிப்பிட்ட காலத்திற்கு பின் நிலவு மறைந்து விடுவதுபோல், அவரும் மறைந்துவிடுவார் என்று விமர்சித்துள்ளார்.


