India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திரத்துக்குப் பிறகு மகாத்மா காந்தி விடுத்த கோரிக்கையை காங். தலைவர்கள் நிராகரித்து விட்டதாக ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், 1947இல் சுதந்திரம் அடைந்தபிறகு, நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதால், காங்கிரசைக் கலைத்து விடும்படி காந்தி கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். ஆனால் அந்தக் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்காமல் நிராகரித்து விட்டதாகவும் ராஜ்நாத் சிங் சாடினார்.
குரு பார்க்க கோடி நன்மை என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதுவரை மேஷ ராசியில் பயணித்து வந்த குரு, நாளை பகல் 12.59 மணியளவில் ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த நாளில், கோயிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்கள் நமது வீட்டில் உள்ள பெரியவர்கள், ஆசிரியர்கள், நம்மை குருவாக வழி நடத்துபவர்களிடம் ஆசி பெறலாம். மேலும், குரு பகவான் சிறப்பு ஸ்தலங்களான தஞ்சை உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.
சத்தீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாராயண்பூரில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பெண் நக்சல்கள் உள்ளிட்ட 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் சடலங்களின் அருகில் கிடந்த ஏராளமான ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.
கொடைக்கானல் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், ஓய்வெடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கு அவர் கோல்ஃப் மைதானத்துக்குச் சென்று விளையாடி மகிழ்ந்தார். இதையடுத்து வந்த முதல்வரைக் காண கொடைக்கானல் மக்கள் திரண்டனர். இதைக் கண்ட முதல்வர், அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
லக்னோவில் நடைபெறும் லீக் போட்டியில் மும்பை அணி, லக்னோ அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேஹல் வதேரா, டிம் டேவிட் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். லக்னோ அணியின் மோசின் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.
வரலாறு முக்கியம், N4 படங்களில் நடித்த பிரக்யா நாகரை, நடிகர் ஜெய் திருமணம் செய்தது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 40 வயது பேச்சுலராகவே இருப்பவர் ஜெய். இந்நிலையில், நடிகை பிரக்யா கழுத்தில் தாலியுடன், ஜெய்யும் அவரும் கையில் பாஸ்போர்ட் வைத்திருப்பது போன்ற போட்டோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், உண்மையான திருமணமா அல்லது சினிமா சூட்டிங்கா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. 3ஆம் கட்டத் தேர்தலின்போது, அந்தத் தொகுதிக்கு மே மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு அடிப்படை அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, வாக்குப்பதிவை மே 25ஆம் தேதிக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
100 கிலோ பளு தூக்கிய புகைப்படத்தைப் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் தொடர்ந்து படங்களை அவர் நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் உடல்பயிற்சியிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 100 கிலோ எடையைத் தூக்கிய படத்தை வெளியிட்டு, பீஸ்ட் போல உணர்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 2 கட்டங்களில் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 102 தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 66.14% வாக்குகளும் [ஆண்கள் (66.22%), பெண்கள் (66.07%), மூன்றாம் பாலினத்தவர்(31.32%)], 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 66.71% வாக்குகளும் [ஆண்கள் (66.99%), பெண்கள் (66.42%), மூன்றாம் பாலினத்தவர் ( 23.86%)] பதிவாகின.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், வீட்டு உபயோகப் பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ், பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகிறது. அந்த வகையில், வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், LED பல்புகள் உள்ளிட்ட சாதனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. இந்தப் பொருட்களை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.