News April 30, 2024
100 கிலோ பளு தூக்கிய ராஷ்மிகா மந்தனா

100 கிலோ பளு தூக்கிய புகைப்படத்தைப் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் தொடர்ந்து படங்களை அவர் நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் உடல்பயிற்சியிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 100 கிலோ எடையைத் தூக்கிய படத்தை வெளியிட்டு, பீஸ்ட் போல உணர்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 10, 2025
BREAKING: முடிவை அறிவித்தார் OPS

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவோர் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என எண்ணுவதாக OPS தெரிவித்துள்ளார். போடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிணைவது குறித்து பொதுக்குழு நடத்துவோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார். EPS தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் <<18520304>>நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில்<<>> ஒன்றிணைப்பு தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை.
News December 10, 2025
அதிமுக கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள்

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதித் துறைக்கே சவால் விடும் திமுக அரசின் ஆதிக்க மனப்பான்மைக்கு கண்டனம் ➤விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ➤கோவை, மதுரை மெட்ரோவுக்கு அனுமதி வேண்டும் ➤SIR பணிகளுக்கு வரவேற்பு ➤TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலுக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
News December 10, 2025
கூட்டணிக்கு EPS-தான் தலைவர்

NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக EPS-ஐ அங்கீகரித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் EPS-க்கு வழங்கப்படுகிறது எனவும், கூட்டணிக்கு மேலும் சில புதிய கட்சிகள் வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


