News June 13, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்.
➤துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை
➤நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும்.
➤வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி.

News June 13, 2024

அதிகப்படியான இஞ்சி பாதிப்பைத் தருமா?

image

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்திருந்தாலும் இஞ்சியை அளவுடனே சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். சளித்தொல்லை முதல் வயிறு செரிமானம் வரை பலவற்றுக்கும் இஞ்சி அருமருந்து. இதை நாள் ஒன்றுக்கு 4 கிராம் என்றளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டுமாம். இதயப் பிரச்னை உள்ளோர், கர்ப்பிணிகள், நீரிழிவு இருப்பவர்கள் இஞ்சியைத் தவிர்க்கலாம். வெறும் வயிற்றில் அதிகமாக இஞ்சி எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

News June 13, 2024

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தடை

image

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 23 மாணவர்களுக்கு தேர்வு எழுத 1 முதல் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், முறைகேடு காரணமாக 40 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்த நிலையில், அதை தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மறுத்துள்ளது.

News June 13, 2024

ஜூன் 13: வரலாற்றில் இன்று

image

➤ 1381 – லண்டனில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது.
➤ 1625 – முதலாம் சார்லஸ், பிரான்ஸ் இளவரசி மரியாவைத் திருமணம் புரிந்தார்.
➤1886 – வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.
➤ 1934 – ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
➤ 1955 – ரஷ்யாவில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

News June 13, 2024

சந்திரபாபு நாயுடுவுக்கு நிதிஷ் குமார் வாழ்த்து

image

ஆந்திர முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு தலைமையில், ஆந்திரா, வளர்ச்சி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாத நிலையில், மத்திய அரசு நிதிஷ் மற்றும் சந்திர பாபு நாயுடுவின் ஆதரவில் தொடர்வது குறிப்பிடத்தக்கது. இருகட்சிகளுக்கும் மக்களவையில் 28 எம்பிக்கள் உள்ளனர்.

News June 13, 2024

சூப்பர் 8 சுற்றை உறுதி செய்த இந்திய அணி

image

அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதை போல குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் அடிப்படையில், நமீபியா மற்றும் ஓமன் அணிகள் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளன.

News June 13, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
விளக்கம்: நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

News June 13, 2024

புதிய சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

image

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்து வீசினார். இந்த ஆட்டத்தில் அவர் 4 ஓவர்களில் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமெரிக்காவுக்கு எதிரான அர்ஷ்தீப் சிங்கின் இந்த பந்துவீச்சு டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இரண்டாவது இடத்தில் அஸ்வின் உள்ளார். அவர் 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை 2014இல் வீழ்த்தினார்.

News June 13, 2024

நடிகர் விக்ரம் பகிர்ந்த ‘தங்கலான்’ க்ளிக்

image

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தங்கலான்’. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பார்வதி , பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் சுரங்கம் பின்னணியில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வை மையமாக வைத்து உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், புகைப்படம் ஒன்றை, நடிகர் விக்ரம் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News June 13, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

error: Content is protected !!