India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக எழுந்த புகார்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், 1563 பேருக்கு மட்டும் மறுதேர்வு நடத்துவதாக தேசிய தேர்வு முகமை கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அல்லு அர்ஜூன் நடித்துள்ள ‘புஷ்பா – 2’, ஆக.15ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததாலும். சுதந்திர தினத்தன்று தமிழ் மற்றும் இந்தி மொழியின் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாலும், புஷ்பா -2 தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, விநியோகஸ்தர்கள் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளன.

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, போக்சோ வழக்கில் கைது செய்ய சிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியும் ஆஜராகததால், கைது வாரண்ட் கோரி சிறப்பு நீதிமன்றத்தை சிஐடி போலீசார் நாடியுள்ளனர். அதே நேரம், இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்துள்ளார் எடியூரப்பா.

மும்பையில் ஆன்லைன் மூலம் ஐஸ்க்ரீம் கோன் ஆர்டர் செய்து சாப்பிட்ட பெண், அதில் மனித விரல் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், விரலை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்க்ரீமை தயாரித்த Yummo நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல் எப்படி வந்திருக்க முடியும் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடப்பாண்டில் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்விற்கு எதிராக 2 ஆயிரம் மாணவர்களிடம் கையெழுத்து பெற்று, அலக் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் நடைபெற்றதால் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேர விரயம், கேள்வித் தாள் மாற்றம் ஆகிய காரணங்களுக்காக 5 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அமைச்சர் மஸ்தானுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவ்விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று மஸ்தான் கூறியுள்ளார். அதே நேரம், கேரளாவில் இவ்விபத்து குறித்து ஆலோசிக்க சிறப்பு சட்டமன்றம் கூடியுள்ளது. 25க்கும் அதிகமான மலையாளிகள் இதில் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ‘தக் லைப்’ படப்பிடிப்பின் போது காயமடைந்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. ஹெலிகாப்டரில் இருந்து ஜார்ஜ் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது, அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விபத்தின் போது, கமலும் உடன் இருந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் Aவில் இருந்து இந்தியாவும் குரூப் Bஇல் இருந்து ஆஸ்திரேலியாவும் அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றிருப்பதால் இவ்விரு அணிகளும் மோதும் தேதி உறுதியாகியிருக்கிறது. நடப்பு அட்டவணையின்படி ஜூன் 24ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் டேரன் சமி மைதானத்தில் மோதவுள்ளன. ஒருநாள் உலகக் கோப்பை தோல்விக்கு பழிவாங்குமா இந்தியா?

விண்வெளி கிரகவாசிகள் குறித்து ஆய்வு நடத்தும் 2 ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், டெய்லி மெய்ல் பத்திரிகையுடன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளனர். அதில், வேற்றுகிரகத்தில் இருந்து விண்வெளி கிரகவாசிகள் பூமிக்கு வருவதில்லை எனவும், பூமியில்தான் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து வாழ்கின்றனர், கடலுக்கடியிலும், எரிமலை பகுதியிலும் வாழ வாய்ப்புள்ளது, நிலவிலும் வாழ வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.