News June 14, 2024

குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம்

image

டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. பருவமழை பொய்த்ததால், டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயிகளுக்கு உதவும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்காக சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ₹78.67 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

MRP விலை என்றால் என்ன? (2/2)

image

MRP-யை விட கூடுதல் விலைக்கு பொருள் விற்கப்பட்டால், அதுகுறித்து சட்ட அளவியல் துறையிடம் புகார் அளிக்கலாம். அதுகுறித்து விசாரித்து, அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நுகர்வோர் ஆணைய எண்களான 1800-11-4000/ 1915 ஆகியவற்றிலும் புகார் அளிக்கலாம். 8800001915 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி, மாவட்ட, தேசிய நுகர்வோர் ஆணையம் மற்றும் Umang செயலிகள் மூலமோ புகார் அளித்தும் தீர்வு பெறலாம்.

News June 14, 2024

MRP விலை என்றால் என்ன? (1/2)

image

ஒவ்வொரு பொருள்களையும் எவ்வளவு அதிகபட்ச விலை வைத்து விற்கலாம் என்பதற்கான குறியீடே MRP விலை. இது அந்தப் பொருள் இருக்கும் பாக்கெட்டுகளின் பின்பக்கத்திலோ, முன்பக்கமோ குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த MRP விலைக்குள், வரிகள், தயாரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு, லாபம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கி விடும். ஆதலால், கடைகளிலோ, ஆன்லைனிலோ பொருள்களை MRP விலையை பார்த்து வாங்குவது நல்லது.

News June 14, 2024

அங்கீகாரம் கேட்கிறது நாம் தமிழர் கட்சி

image

மாநிலக் கட்சி அங்கீகாரம் கேட்டு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. ஒரு தேர்தலில் 8% வாக்குகளுக்கு மேல் பெறும் கட்சிகள் மாநிலக் கட்சி அங்கீகாரம் பெறலாம். அப்படிப் பெற்ற கட்சிகளுக்கு, நிரந்தர சின்னம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8%க்கு மேல் வாக்குகள் பெற்றதால் கடிதம் எழுதியிருக்கிறது.

News June 14, 2024

சிம் கார்டுகளுக்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படாது: TRAI

image

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி செல்ஃபோன் சிம் கார்டுகளுக்கு தனிக் கட்டணம் வசூலிக்க உள்ளதாக வெளியான தகவலை TRAI மறுத்துள்ளது. அதன் அறிக்கையில், “செல்ஃபோன் சிம் கார்டுகள் & பயன்படுத்தப்படாத எண்கள் இரண்டிற்கும் அபராதமோ அல்லது தனிக் கட்டணமோ விதிக்க திட்டமிடப்படவில்லை. இத்தகைய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இந்த யூகங்கள் தொடர்பாக மக்கள் கவனம் செலுத்த வேண்டாம்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News June 14, 2024

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை: ரம்யா

image

அரசியல் அழுத்தங்களுக்கு கர்நாடக காவல்துறை அடிபணியாது என்று ‘குத்து’ பட நடிகை ரம்யா தெரிவித்துள்ளார். கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் & நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “இங்கே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என யாருமில்லை. சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ரேணுகா சுவாமிக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 14, 2024

கிரிக்கெட் முடிந்ததும் அலுவலக பணி

image

இந்தியாவில் இருந்து USA சென்றவர் சவுரப் நேத்ராவால்கர். T20WC தொடரில் USA அணியின் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டார். கிரிக்கெட்டைத் தாண்டி, Oracle என்ற நிறுவனத்திலும் பணியாற்றுகிறார். இந்த நிலையில், T20WC போட்டி முடிந்ததும், லேப்டாப்பில் அலுவலக பணிகளை மேற்கொள்வார் என அவரது சகோதரி நிதி கூறியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது. பலரும் அந்நிறுவனத்தின் வேலை கலாச்சாரத்தை விமர்சித்து வருகின்றனர்.

News June 14, 2024

வாட்ஸ் அப் வீடியோ காலில் 32 பேர் வரை பேசும் வசதி

image

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப், தொடர்ந்து வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது வீடியோ காலில் பேசுவோர் எண்ணிக்கையை 32ஆக அதிகரித்துள்ளது. இதனால் இனிமேல் 32 பேர் வரை குழுவாக வீடியோ காலில் பேச முடியும். அத்துடன் வீடியோ காலில் யார் பேசுகிறாரோ அவரின் காணொலி முதலில் வரும்வகையில் புதிய வசதியையும் வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது.

News June 14, 2024

EPFO: கோவிட்-19 அட்வான்ஸ் சேவை நிறுத்தம்

image

கொரோனா காலத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக, EPFO-யில் இருந்து கோவிட்-19 அட்வான்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இச்சேவையை பயன்படுத்தி இருமுறை முன்பணம் பெறலாம். இந்த நிலையில், தற்போது அதற்கான தேவை இல்லை என்பதால், இச்சேவையை திறும்ப பெறுவதாக EPFO நிறுவனம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், விலக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம்

image

ஆந்திர மாநில அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அம்மாநில துணை முதலமைச்சராக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, வனம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் அவரது கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!