News May 3, 2024
அப்துல் கலாம் பொன்மொழிகள்

✍பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை. பிறகென்ன கவலை? ✍நல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும். ✍நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. ✍சாவி இல்லாத பூட்டு இருக்காது. அதுபோல், தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது. ✍உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றும். ✍சுறுசுறுப்பாக இருங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
Similar News
News November 10, 2025
இந்த இடங்களுக்கு உங்களால் செல்லவே முடியாது

உலகில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பல இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மீறி சென்றால் நீங்கள் வீடு திரும்புவது கடினம் தான் என்கின்றனர். அப்படி டாப் சீக்ரெட்டாக இயங்கும் அந்த இடங்கள் என்னென்ன என்பதையும், அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவருக்கு இந்த சுவாரஸ்ய தகவலை SHARE பண்ணுங்க.
News November 10, 2025
நடிகர் அபிநய் காலமானார்.. கடைசி PHOTO

தனுஷ், அபிநய் இருவரும் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில்தான் சினிமாவில் நுழைந்தனர். <<18247782>>நடிகர் அபிநய்<<>> வாழ்க்கையில் பல போராட்டங்களுக்கு இடையே 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், விளம்பரங்களில் நடித்து புகழ் பெற்றார். ஆனாலும், அவரது கடைசி காலம் கசப்பாகவே அமைந்தது. சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பால் உடல் மெலிந்தார். சிகிச்சைக்காக தனுஷ் உள்ளிட்டோர் உதவி அளித்தும் பலனளிக்காமல் மறைந்துவிட்டார். #RIP
News November 10, 2025
டிரம்ப்பால் அடுத்தடுத்து விலகிய BBC நிர்வாகிகள்!

டிரம்ப் குறித்த ஒரு ஆவணப்படத்தால், BBC 2 உயர் அதிகாரிகளை இழந்துள்ளது. டிரம்ப் 2021-ல் ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக BBC ஆவணப்படம் வெளியிட்டது. ஆனால், 2 உரைகளை எடிட் செய்து தவறான பிம்பத்தை ஏற்படுத்தியதாக டிரம்ப் குற்றம்சாட்டிய நிலையில் விசாரணையில் நிரூபணமானது. இதற்கு பொறுப்பேற்று BBC டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ராஜினாமா செய்துள்ளனர்.


