India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சர்வதேச அமைதி மாநாட்டில் உக்ரைன் போருக்கு எதிரான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 80 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைன்-ரஷியா போர் குறித்து விவாதிப்பதற்காக சுவிஸின் லூசர்ன் நகரில் இரு நாள் மாநாடு நடந்தது. அமெரிக்கா உள்பட சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டின் இறுதியில் உக்ரைன் போருக்கு எதிரான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற பெருமையை PAK அணியின் கேப்டன் பாபர் அசாம் பெற்றுள்ளார். IRE அணிக்கு எதிரான 36ஆவது லீக் போட்டியில், பாபர் 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் 17 இன்னிங்ஸ்களில் 549 ரன்கள் எடுத்தார். அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள்:- தோனி (529 IND), வில்லியம்சன் (527-NZ), ஜெயவர்த்தனே (360-SL), கிரேம் ஸ்மித் (352-SA ) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

18ஆவது மக்களவை ஜூன் 24இல் கூடவுள்ளது. மக்களவை கூடியதும், அதன் தற்காலிக தலைவராக மூத்த எம்.பி., ஒருவர் பதவியேற்று, புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். ம.பி., (பாஜக) வீரேந்திர குமார், கேரளாவின் (காங்.,) கொடிக்குன்னில் சுரேஷ் ஆகிய 7 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரேந்திர குமார் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதால், சுரேஷ் தற்காலிக தலைவராக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

▶ஜூன்- 17 | ஆனி – 03
▶கிழமை: திங்கள் | ▶திதி: ஏகாதசி
▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: காலை 07:30 – 09:00 வரை
▶எமகண்டம்: காலை 10:30 – 12:00 வரை
▶குளிகை: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

2026இல் சட்டமன்றத்தில் புலிப்படை நுழைவது உறுதி என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறியுள்ளார். மயிலாடுதுறையில் பேசிய அவர், “நாடாளுமன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ, மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக பேசுவோம். உயர்ந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்போம். எங்கள் கனவு தேர்தலில் வென்று பதவியை பிடிப்பதல்ல; மக்களின் மனதையும் சிந்தனையையும் வெல்வதுதான் எங்கள் கனவு” எனத் தெரிவித்துள்ளார்.

Future & Options ட்ரேடிங் தொடர்பான புரிதல் இல்லாத சில்லறை முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என தேசிய பங்குச் சந்தை தலைவர் ஆஷிஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார். F & O ட்ரேடிங்கில் அதிக லாபத்தை பெற முடியும் என்ற ஒரு தவறான தகவல் முதலீட்டாளர்கள் மத்தியில் பரப்பப்படுகிறதெனக் கூறிய அவர், இதில் ஈடுபடக்கூடிய பெரும்பாலானவர்கள் நஷ்டத்தில்தான் வெளியே வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் & பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் தொடர்பாக அனைத்து சட்ட பல்கலைக்கழகங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற PAK அணி, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. இதன் காரணமாக பாபர் அசாம், ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்களின் ஊதியத்தை குறைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நாக்வி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், சில வீரர்களை ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த மாதுளை மல்லி ஜூஸை பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி அளவு கொத்தமல்லியுடன் ஒரு மாதுளம் பழம், நெல்லிக்காய், எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்தால் ஜூஸ் ரெடி. இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் 45 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கல்லீரலில் உள்ள கொழுப்பு & நச்சு உள்ளிட்ட அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

அரசு வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு 1% இட ஒதுக்கீட்டை மேற்கு வங்க அரசு வழங்க வேண்டுமென கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், திருநங்கையரை வேலைவாய்ப்பில் சமமாக நடத்தும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.