News June 17, 2024
ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய சட்டங்கள்

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் & பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் தொடர்பாக அனைத்து சட்ட பல்கலைக்கழகங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 591 ▶குறள்: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. மறை. ▶பொருள்: ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
News January 25, 2026
டி20 WC புதிய அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

வங்கதேச அணி வெளியேறியதை அடுத்து பிப்.7 முதல் தொடங்கவுள்ள டி20 WC தொடருக்கான புதிய அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் C-யில் இங்கிலாந்து, இத்தாலி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் <<18945660>>ஸ்காட்லாந்து அணி<<>>, வங்க தேசத்திற்குப் பதிலாக இடம்பெற்றுள்ளது. அணி மட்டுமே மாறியுள்ள நிலையில், போட்டித் தேதி, நேரம் உட்பட வேறு எதுவும் மாறவில்லை. புதிய அட்டவணையை காண வலது பக்கம் Swipe செய்யவும்.
News January 25, 2026
விசில் தேவையில்லை; குக்கர் விசில் போதுமானது: தமிழிசை

CBI, சென்சார் போர்டை பயன்படுத்தி விஜய்யை NDA-வில் இணைக்க பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் CBI விஜய்யை வர சொல்வது, பாஜக கூட்டணியில் அவரை சேர்ப்பதற்கான முயற்சி அல்ல என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விசில்(தவெக) எங்களுக்கு உடனே தேவையில்லை என்றும், எங்களிடம் இருக்கும் குக்கர் விசில்(அமமுக) போதுமானது எனவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.


