India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அடுத்தடுத்த தொடர் விபத்துக்களால் இந்திய ரயில்வே துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 2023 ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவில் பாலசோர் ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபரில் விஜயநகரத்தில் 2 ரயில்கள் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர். இம்மாதம் 2ஆம் தேதி பஞ்சாபில் ஃபதேகர் சாஹேப்பில் நடந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். இன்று மேற்குவங்கத்தில் ஏற்பட்ட ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சசிகலா குற்றச்சாட்டு தொடர்பாக இபிஎஸ் பதிலளித்துள்ளார். அதிமுகவில் சாதி அரசியல் செய்யப்பட்டு வருவதாக சசிகலா கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை” என்றார். சசிகலா குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் சில கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சோதனையின்போது பைக், கார் சாவியை படக்கென்று போக்குவரத்து போலீசார் எடுப்பதைப் பார்த்திருப்போம். இதற்கு சட்டத்தில் அனுமதியுள்ளதா என்று பார்த்தால், நிச்சயம் இல்லை எனலாம். அபராதம் விதிக்கவே மோட்டார் வாகனச் சட்டத்தின் 129ஆவது பிரிவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பைக், கார் சாவியை போலீஸ் எடுக்கும்பட்சத்தில், அவர்கள் மீது சட்டரீதியில் வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹15 குறைந்து ₹6,690க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹53,640க்கு விற்பனையான நிலையில் இன்று ₹120 குறைந்து ₹53,520க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹95.60க்கு விற்பனையாகிறது.

இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் 4,076 பவுண்டரிகள் விளாசி, அதிக பவுண்டரி அடித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா 3,015 பவுண்டரிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். ஆஸி முன்னாள் வீரர் பாண்டிங் (2,781 பவுண்டரி), இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே (2,679 பவுண்டரி), இந்திய அணி வீரர் கோலி (2,647 பவுண்டரி) ஆகியோர் 3 முதல் 5 வரையிலான இடங்களை வகிக்கின்றனர்.

மக்களவைத் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் என்பதால், அந்த பதவியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவையின் மூத்த உறுப்பினர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதால், 7ஆவது முறையாக எம்பிக்களாக இருக்கும் திமுகவின் டி.ஆர்.பாலு, கேரள காங்கிரஸ் எம்.பி தலைவர் சுரேஷ்க்கு அந்த வாய்ப்பு உள்ளது. டி.ஆர்.பாலு மாநிலங்களவை எம்பியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் விரைவு ரயிலின் கடைசி 3 பெட்டிகள் சீர்குலைந்தன. தொடர்ந்து, மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்துள்ளனர். இவ்விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் உள்ள 10 இலக்க செல்போன் எண்கள் 9,8,7,6 என்று தொடங்குவதைப் பார்த்திருப்போம். 0,1,2,3,4,5, என ஆரம்பிக்காமல், அவை ஏன் 9,8,7,6 என ஆரம்பிக்கிறது என கேள்வி எழலாம். அதற்கான பதிலைத் தெரிந்து கொள்வோம். 0 என்ற எண் எஸ்டிடி கோடுகளுக்கும், 1 எண் அரசு சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. 2,3,4,5 எண்கள் தரைவழி தொலைபேசிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் செல்போன் எண் 9,8,7,6 எனத் தொடங்குகின்றன.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சீனிவாச ராவ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். கஜூவாகா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர், விசாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியின் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதுவரை கட்சித் தலைவராக இருந்து வந்த ஆந்திர அமைச்சர் அட்சயநாயுடு அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அட்சயநாயுடு 5 முக்கிய துறைகளின் அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.