News June 17, 2024

துணை சபாநாயகர் ரேஸில் டி.ஆர்.பாலு?

image

மக்களவைத் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் என்பதால், அந்த பதவியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவையின் மூத்த உறுப்பினர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதால், 7ஆவது முறையாக எம்பிக்களாக இருக்கும் திமுகவின் டி.ஆர்.பாலு, கேரள காங்கிரஸ் எம்.பி தலைவர் சுரேஷ்க்கு அந்த வாய்ப்பு உள்ளது. டி.ஆர்.பாலு மாநிலங்களவை எம்பியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 17, 2026

மாயமான விமானம்… 11 பேர் பலியா?

image

இந்தோனேசியாவின் ATR 42-500 ரக விமானம் இன்று மாயமாகியுள்ளது. மதியம் 1:17 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது எனவும், அதன் கடைசி சிக்னல் Makassar என்ற பகுதிக்கு வடகிழக்கே சுமார் 20 கிமீ தூரத்தில் பெறப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானம் விபத்துக்குள்ளானதை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் அதில் பயணித்த 14 பேரின் நிலைமை தற்போது கேள்வி குறியாகியுள்ளது.

News January 17, 2026

கூட்டணி முடிவு வெளியானது.. அதிரடி திருப்பம்

image

தமிழகத்தில் PM மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட பதாகையில் TTV போட்டோ இடம்பெற்றது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில், கூட்டணி பற்றி உரிய நேரத்தில் ‘உரியவர்கள்’ அறிவிப்பார் என்று TTV தினகரன் கூறியுள்ளார். இதனால் அவர் மீண்டும் NDA கூட்டணியிலேயே இணைவார் என்றும், அதனை PM மோடி அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News January 17, 2026

இனி வீடியோ மூலமே வங்கிக் கணக்கு திறக்கலாம்

image

இனி வங்கிக்கு நேரடியாகச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து வங்கிக் கணக்கை தொடங்க அவசியமில்லை. வீட்டிலிருந்தே வீடியோ KYC மூலம் வங்கிக் கணக்கை திறக்கலாம். ஆதார் கார்டு (அ) டிஜிலாக்கரில் உள்ள உங்களின் ஆவணங்களைக் கொண்டு வங்கி வெப்சைட் மூலம் இதனை செய்து முடிக்கலாம். வீடியோ KYC வசதி உங்கள் வங்கியின் நேரப்படி வழங்கப்படுகிறது. இதனை RBI அறிவித்துள்ளதால் எவ்வித அச்சமும் இன்றி செய்யலாம். SHARE IT.

error: Content is protected !!