News June 17, 2024
ஒரே வருடத்தில் 4 பயங்கர ரயில் விபத்துகள்

அடுத்தடுத்த தொடர் விபத்துக்களால் இந்திய ரயில்வே துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 2023 ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவில் பாலசோர் ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபரில் விஜயநகரத்தில் 2 ரயில்கள் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர். இம்மாதம் 2ஆம் தேதி பஞ்சாபில் ஃபதேகர் சாஹேப்பில் நடந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். இன்று மேற்குவங்கத்தில் ஏற்பட்ட ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News January 21, 2026
NDA கூட்டணியில் மீண்டும் OPS?

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தொடர்ந்து <<18915214>>ஓபிஎஸ்ஸும் <<>>திமுகவில் இணையலாம் என பேசப்பட்டது. இந்நிலையில் NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அவருக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. OPS மகனுக்கு ஒரு தொகுதியும், அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி MLA அய்யப்பனுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
News January 21, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. பெரியளவில் தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60 காசுகள் சரிந்துள்ளது. இதன்மூலம், வரலாறு காணாத அளவிற்கு ஒரு டாலர் ₹91.74 ஆக உயர்ந்துள்ளது. டாலருக்கான வலுவான தேவை, உலக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால், இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2025-ல் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 4.95% சரிந்தது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
கோலியை முந்திய நியூசிலாந்து வீரர்!

ஐசிசி ODI பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் என 352 ரன்கள் குவித்ததன் மூலம் அவர், 61 புள்ளிகள் ஏற்றம் கண்டு 845 புள்ளிகளுடன் உள்ளார். 795 புள்ளிகளுடன் கோலி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். NZ தொடரில் 61 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.


