India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். MBBS, BDS படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாகவும், ₹20 லட்சத்துக்கு வினாத்தாள் விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மும்பையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 20 வயது மாணவர் ஒருவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் சவுபின் சாஹிருக்கு ஜாமின் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் லாபத்தில் 40% தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றியதாக கேரளாவைச் சேர்ந்த சிராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனி மனு தாக்கல் செய்த நிலையில், வரும் 22ஆம் தேதி வரை அவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் மறுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
CSK வீரர் தோனி, பஞ்சாப் அணிக்கு வர தனக்கு விருப்பமுள்ளதாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். பஞ்சாப் அணியில் தோனி இருக்க வேண்டுமென்று, ரசிகர் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தாவிடம் X பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “எல்லோரும் அவரை விரும்புவார்கள். நேற்று பஞ்சாப் அணி வெல்லும், தோனி நிறைய சிக்ஸ் அடிப்பார் என ஆவலுடன் இருந்தேன். ஆனால் இரண்டுமே நடைபெறவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பாஸ்கர் சக்தி, வடக்கன் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ஹீரோவாக குங்கும ராஜ், ஹீரோயினாக வைரமாலா நடித்துள்ளனர். இவர்களுக்கு இதுதான் அறிமுக படம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நெல்லை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயமாகியுள்ளது. அவர் உயிரிழந்து கிடந்த இடத்தில் அவரது ஆதார், ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் தீவிர சோதனை நடந்து வருகிறது. அத்துடன், இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
வெயில் வாட்டி வதைப்பதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் சுமார் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டிகள் வரை பீர் விற்பனை நடைபெறும். ஆனால், தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் பெட்டிகள் வரை பீர் விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை காலத்தை தமிழ்நாடு கூலிங் பீர் குடித்து கழிக்கிறது.
ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டிகளில் விளையாட வீரர்களை அனுமதிக்குமாறு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சியைத் தொடங்க, இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப இருந்தனர். ஆனால், ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீரர்கள் நாடு திரும்புவது அணிகளுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டாளர்களின் குருவாக கருதப்படும் வாரன் பஃபெட், இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியா போன்ற நாடுகளில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அங்கு முதலீடு செய்வது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.
+2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க, மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு சுகாதாரத் துறை மூலம் 100 மனநல ஆலோசகர்கள் மனநலம் சார்ந்த ஆலோசனை வழங்கவுள்ளனர். சுழற்சிக்கு 30 ஆலோசகர்கள் வீதம், 3 சுழற்சியில் செயல்படுவர். மனநல ஆலோசனைகளுக்கு ‘104’ மற்றும் ‘14416’ ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.