News June 17, 2024
நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்

நடிகரும், பிக்பாஸ் 7 போட்டியாளருமான பிரதீப் ஆண்டனி, தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக X பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பலரது ஆதரவை பெற்ற அவர், சிலரது குற்றச்சாட்டுகளால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இருப்பினும், அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Similar News
News January 19, 2026
பாஜகவின் தேசிய தலைவராகும் நிதின் நபின்

நிதின் நபின் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய தலைவர் பதவிக்கு அவர் மட்டுமே இதுவரை மனுதாக்கல் செய்துள்ளதால், ஒருமனதாக நபின் தேர்தெடுக்கப்பட உள்ளார். PM மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர். நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் நபின் தலைவராக அறிவிக்கப்பட உள்ளார்.
News January 19, 2026
10th பாஸ் போதும்… ₹20,000 சம்பளம்

ஆதார் மைய அலுவலகங்களில் 282 சூப்பர்வைசர், ஆபரேட்டர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *18 வயது நிரம்பி இருக்க வேண்டும் *கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ஐடிஐ *தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் *சம்பளம்: ₹20,000 *வரும் 31-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் *விண்ணப்பிக்க <
News January 19, 2026
விஜய்யை மிரட்டும் பாஜக: TKS இளங்கோவன்

‘ஜன நாயகன்’ படத்திற்கு திட்டமிட்டு பாஜக இடையூறு செய்வதாக டிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என பாஜக விரும்புவதால் இவ்வாறு மிரட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக ஒரு வாஷிங்மெஷின் போன்றது என்ற அவர், தங்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால் ஒருவரின் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் அவர்கள் நீக்கிவிடுவார்கள் எனவும் சாடியுள்ளார்.


