News June 17, 2024
பாபர் அஸாம் அணியில் இடம்பெற தகுதியற்றவர்

பாபர் அஸாம் பாகிஸ்தான் அணியில் இடம்பெற தகுதியற்றவர் என்று ஷேவாக் விமர்சித்துள்ளார். முதல் 6 ஓவர்களில் 50-60 ரன்கள் எடுக்க முடியாத போது பாபர் ஓப்பனிங் இறங்கி என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய அவர், கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டால், பாகிஸ்தான் டி20 அணியில் இடம்பெற தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் பாபர் அஸாம், 4 ஆட்டங்களில் 122 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
Similar News
News January 16, 2026
கூட்டணி ஆட்சியில் 5 மினிஸ்டர்: மாணிக்கம் தாகூர்

திமுக கூட்டணி ஆட்சியில் காங்.,க்கு 5 அமைச்சர்கள் கொடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் நாசுக்காக லிஸ்டை வெளியிட்டுள்ளார். பொதுபணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற ‘வளமிக்க’ துறைகளை காங்., தேடி போவதில்லை. மக்களை மையமாக கொண்ட சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி போன்ற துறைகள் என நாசுக்காக தனது விருப்பத்தை கூறியுள்ளார்.
News January 16, 2026
ரயில்வேயில் வேலை.. ₹45,000 வரை சம்பளம்

RRB-ல் Lab Assistant Gr. III, Senior Publicity Inspector, Chief Law Assistant உள்ளிட்ட 312 பணியிடங்கள் நிரப்படவுள்ளன *கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை வேலைக்கேற்ப மாறுபடும் *வயது: 18- 40 *தேர்வு முறை: கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு *வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹19,900- ₹44,900 *விண்ணப்பிக்க <
News January 16, 2026
பாஜக புதிய தேசிய தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

பாஜகவின் செயல் தலைவராக பிஹாரைச் சேர்ந்த நிதின் நபின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜன.20-ல் பாஜகவின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19-ல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிதின் நபினே போட்டியின்றி பாஜகவின் புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


