News July 15, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

News July 15, 2024

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு

image

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. அப்போது, பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டு, ஆடி மாத பிறப்பான நாளை அதிகாலை 5 மணிக்கு நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி, பக்தர்கள் விர்சுவல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News July 15, 2024

5 மாவட்டங்களில் இன்று கனமழை

image

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

News July 15, 2024

“X” தளத்தில் இந்திய அரசியல் தலைவர்கள்

image

2009ம் ஆண்டு முதல் X தளத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். தற்போது அந்த தளத்தில் மோடியை பித்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. இதுபோல் மற்ற அரசியல் தலைவர்கள், பிரபலங்களை பின் தொடர்வோர் எண்ணிக்கை குறித்து தெரிந்து கொள்ளலாம். *ராகுல் – 2.64 கோடி *கெஜ்ரிவால் – 2.75 கோடி *அகிலேஷ் – 1.99 கோடி * மம்தா – 74 லட்சம் * லாலு – 63 லட்சம் * தேஜஸ்வி – 52 லட்சம் * சரத் பவார் – 29 லட்சம்.

News July 15, 2024

மணிப்பூரில் ஆயுதங்கள் சிக்கின

image

மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கிழக்கு & மேற்கு இம்பாலில் ஆயுதங்களை கண்டறிந்துள்ளனர். அதில், AK 56 துப்பாக்கி, SLR துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

News July 15, 2024

உங்களுக்கு உரிமைத் தொகை ₹1000 வருமா? செக் பண்ணுங்க

image

மகளிர் உரிமைத் தொகை ₹1000 பெற, மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று ₹1000 செலுத்தப்பட உள்ளது. இதற்கு, தேர்வானவர்களின் வங்கிக் கணக்கு சரியானது தானா என்பதை உறுதி செய்யும் வகையில், நேற்று ₹1 அனுப்பி சோதனை செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு ₹1 வரவு வைக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் இன்று உரிமைத் தொகை கிடைக்கும்.

News July 15, 2024

வெறும் வயிற்றில் ஆப்பிள், கொய்யா சாப்பிடலாமா?

image

குளிர்காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள், கொய்யா பழங்களை சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கொய்யாவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதென்றும், மீறி சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும் என கூறுகின்றனர். வெறும் வயிற்றில் ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

News July 15, 2024

நேபாள் புதிய பிரதமராக ஒலி இன்று பதவி ஏற்பு

image

நேபாள் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு தோற்றது. இதையடுத்து முன்னாள் பிரதமர் கேபி ஷர்மா ஒலி ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரை நேபாள் பிரதமராக அந்நாட்டு அதிபர் நேற்று நியமித்தார். இதனை தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு அவர் பிரதமராக 4ஆவது முறையாக பதவி ஏற்கிறார். நேபாள் நாடாளுமன்றத்தில் (மொத்தம் 275) கேபி ஷர்மா ஒலிக்கு 165 எம்பி.க்களின் ஆதரவு உள்ளது.

News July 15, 2024

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் இன்று

image

தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர் பெருந்தலைவர் காமராஜர். 6 வயது பள்ளிச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். இதனால் பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானார். சிறுவயது வறுமையை உணர்ந்த அவர், தான் முதல்வரானதும், மதிய உணவு திட்டத்தை தொடங்கி ஏழை மாணவர்கள் தடையின்றி பள்ளி வருவதற்கு வழிவகுத்தார்.

News July 15, 2024

ஜிம்பாப்வே தொடர்: சாதனை படைத்த இளைஞர் படை

image

ஜிம்பாப்வேயில் இந்திய அணி சுற்று பயணம் செய்து 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியது. இதில் மூத்த வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. கில் தலைமையில் இளைஞர் படையே களமிறக்கப்பட்டது. முதல் போட்டியில் தோற்றபோதிலும், அடுத்த 4 போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அபிஷேக் ஷர்மா, கில், சாம்சன் பேட்டிங்கில் அசத்தினர். பந்து வீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.

error: Content is protected !!