News July 15, 2024
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் இன்று

தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர் பெருந்தலைவர் காமராஜர். 6 வயது பள்ளிச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். இதனால் பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானார். சிறுவயது வறுமையை உணர்ந்த அவர், தான் முதல்வரானதும், மதிய உணவு திட்டத்தை தொடங்கி ஏழை மாணவர்கள் தடையின்றி பள்ளி வருவதற்கு வழிவகுத்தார்.
Similar News
News July 9, 2025
பெண்கள் நீண்ட நேரம் தூங்கினால் தான்..

தினமும் ஆண்களைவிட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுகிறதாம். ஆராய்ச்சிகளின் படி, பெண்கள் அதிகம் multi-task செய்பவர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை நுட்பமாக கையாளுவதால், அவர்களின் மூளை அதிகமான ஆற்றலை பயன்படுத்துகிறது. இதனால், அவர்களுக்கு கூடுதல் தூக்கம் தேவை. தூக்கம் குறைந்தால், மன அழுத்தம், பதட்டம், இதய நோய் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்க எவ்வளோ நேரம் தூங்குவீங்க?
News July 9, 2025
பணத்தை வாங்கிட்டு அப்பெண் தான் ஏமாற்றினார்: யஷ் தயாள்!

பெண் ஒருவர் கொடுத்த <<16987106>>புகாருக்கு<<>> RCB வீரர் யஷ் தயாள் பதிலளித்துள்ளார். அந்த பெண்ணுக்கு தான் Iphone மற்றும் பல லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறிய யஷ் தயாள், அவற்றை அப்பெண் திரும்ப தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஷாப்பிங்கிற்கு செலவு செய்யவும், அப்பெண்ணின் உறுப்பினர்களின் சிகிச்சைக்கு தான் பணம் அளித்துள்ளதாக தெரிவித்த யஷ் தயாள், இவற்றுக்கு தன்னிடம் Proof இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
News July 9, 2025
₹1.23 லட்சம் சம்பளம்… டிகிரி போதும்

இந்திய கடலோர காவல்படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவியில் 170 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்து, பின் டிகிரி முடித்த 21-25 வயதினர் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடல்தகுதி & நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடக்கும். சம்பளம்: ₹56,100 – ₹1.23 லட்சம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 23. இணைய முகவரி: https://joinindiancoastguard.cdac.in/