India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹53,800க்கும், கிராமுக்கு ₹25 குறைந்து ₹6,725க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹90க்கும், ஒரு கிலா ₹90,000க்கும் விற்பனையாகிறது.
தருமபுரியில் தலித் சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கீரைப்பட்டியில் சின்னையன் நடத்திவரும் சலூன் கடையில் யோகேஷ்வரன் பணி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த தலித் சிறுவன் முடி திருத்தம் செய்ய வந்தபோது யோகேஷ்வரன் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சின்னையன், யோகேஷ்வரன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் படைத்துள்ளார். அவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 45 வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். 44 வெற்றிகளுடன் அடுத்த இடத்தில் உகாண்டாவின் பிரையன் மசாபா இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் 42 வெற்றிகளுடன் தோனியும், ஆறாவது இடத்தில் 41 வெற்றிகளுடன் ரோஹித் ஷர்மாவும் உள்ளனர்.
அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 17,000 நெல் மூட்டைகள் கனமழையில் நனைந்ததாக புகார் எழுந்த நிலையில் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல் மழையில் நனைவதும், இதன் விளைவாக விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நிலைமை இப்படியிருக்க திமுக ஆட்சி சொல்லாட்சியல்ல-செயலாட்சி என முதல்வர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
எளிய மக்களின் வாழ்க்கை கதையை பேசும் இயக்குநர் வசந்த பாலன் தற்போது, `தலைமைச் செயலகம்’ எனும் வெப் சீரிஸில் அரசியலைக் களமாக எடுத்து வந்துள்ளார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதுகுறித்து அவர் கூறும்போது, எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்று கவனத்துடன் இந்த சீரிஸை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழில் கூர்மையான அரசியலைப் பேசும் படம் இதுவரை வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
கஞ்சா கடத்தல்காரர்களை கூடவே வைத்திருப்பவர்கள், கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கரை கைது செய்திருப்பதாக திமுக அரசை தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என முதல்வர் கூறுவதாகவும், ஆனால், காங். நிர்வாகி ஜெயக்குமார் இறந்து 7 நாள்களாகியும் துப்பு துலங்கவில்லை என்றார். வேங்கைவயல் வழக்கிலும் குற்றவாளியை பிடிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
ஆக்ராவில் 10 மாதங்களுக்கு பிறகு கொலையாளி ஒருவர் செல்ஃபோன் சிக்னல் மூலம் சிக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் பதக் (42) என்பவர் 10 மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இந்நிலையில் அவரது செல்ஃபோனின் சிக்னல் திடீரென கிடைத்ததால், போலீசார் அதனை தேடிச் சென்றனர். அஜய் பதக்கின் வீட்டில் வேலை செய்த சுஷில் குமார் என்பவர்தான் கொலை செய்துவிட்டு செல்ஃபோனை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
1.முத்தலாக் முறையை திரும்ப கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறதா? 2.பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டுமா?கூடாதா? 3.இந்தியாவின் துல்லிய தாக்குதல்களை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? 4.அயோத்தி ராமர் கோயிலுக்கு ராகுல் காந்தி ஏன் செல்லவில்லை? 5.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவை நீக்கியதை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூருவில் மே 18ம் தேதி மழை பெய்ய உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அன்றைய தினம் பெங்களூருவில் நடைபெற உள்ள சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு, மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், இரு அணிகளும் பிளேஆஃப் செல்வதில் சிக்கல் ஏற்படலாம்.
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் 103 கூட்டங்களில் பங்கேற்றுள்ள நிலையில், ராகுல் 40 கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தொலைக்காட்சிகள், நாளேடுகளுக்கு மொத்த 24 பேட்டிகளை மோடி அளித்துள்ளார். ராகுல் காந்தி சிறப்பு பேட்டிகள் எதுவும் அளிக்கவில்லை. 21 ரோடு ஷோக்களில் பங்கேற்ற பிரதமர், நூற்றுக்கணக்கான கோயில்களில் தரிசனம் செய்துள்ளார். நியாய யாத்திரை மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை ராகுல் சந்தித்தார்.
Sorry, no posts matched your criteria.