News May 13, 2024
பாபர் அசாம் புதிய சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் படைத்துள்ளார். அவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 45 வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். 44 வெற்றிகளுடன் அடுத்த இடத்தில் உகாண்டாவின் பிரையன் மசாபா இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் 42 வெற்றிகளுடன் தோனியும், ஆறாவது இடத்தில் 41 வெற்றிகளுடன் ரோஹித் ஷர்மாவும் உள்ளனர்.
Similar News
News December 16, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கத்தின் விலை இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது. 2025 ஜன.1-ம் தேதி 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹57,200 மட்டுமே. ஆனால், இன்றைய தேதியில் அதன் விலை ₹1,00,120. 1 ஆண்டு நிறைவடைவதற்குள் சவரன் ₹42,920 அதிகரித்திருப்பது சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. வருங்காலத்திலும் <<18573167>>தங்கம் விலை<<>> ஏறுமுகத்தில் இருக்கும் என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
News December 16, 2025
இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்திய நாள்!

1971-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் அடையாளமாக, ஒவ்வொரு ஆண்டும் டிச.16-ம் தேதி விஜய் திவாஸ் தினம் (வெற்றி தினம்) அனுசரிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாக்., ராணுவ தளபதி ஜெனரல் ஆமிர் அப்துல்லா கானும், அவரது 93,000 படைவீரர்களும் சரணடைந்தனர். இந்த போர் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியை, தற்போதைய வங்கதேசமாக உருவாக வழிவகுத்தது.
News December 16, 2025
அரையாண்டு விடுமுறையில் மாற்றம்.. அரசு புதிய அறிவிப்பு

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1-ம் தேதி வரை 9 நாள்கள் என விடுமுறை என்ற அறிவிப்பை அரசு மாற்றியுள்ளது. அதன்படி வந்துள்ள புதிய அறிவிப்பில் டிச.24-ம் தேதி முதல் ஜன.4-ம் தேதி வரை விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு 12 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஜன.1-ம் தேதி வரை மட்டுமே அரையாண்டு விடுமுறையாகும். SHARE IT.


