India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023ஆம் ஆண்டில் ₹1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு இது வெறும் ₹290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் செயற்கை முடிக்கான தேவை அதிகரித்திருப்பதால் முடிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதனை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது.
தெலங்கானாவில் டிசம்பர் மாதம் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, நவம்பர் மாதம் 5.5 லட்சமாக இருந்த ஹைதராபாத் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 4.6 லட்சமாக குறைந்தது. அரசின் இந்த முடிவால் ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் இருந்து விலக L&T நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தால், அவர்களின் லாபம் குறைவதாக L&T குற்றம்சாட்டியுள்ளது.
4ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா – 9.05%, பிஹார் -10.18%, காஷ்மீர் – 5.07%, ஜார்க்கண்ட் – 11.78%, மத்தியப்பிரதேசம் – 14.97%, மகாராஷ்டிரா – 6.45%, ஒடிசா – 9.23%, தெலங்கானா – 9.51%, உத்தரப் பிரதேசம் – 11.67%, மேற்கு வங்கம் – 15.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் ஆந்திரா – 9.21%, ஒடிசா – 9.25% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் தளவாய்ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர் கடத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில், அவர் முதல்வர் ஸ்டாலினுடன் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, டெல்லியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டதாகவும், அதில், ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹53,800க்கும், கிராமுக்கு ₹25 குறைந்து ₹6,725க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹90க்கும், ஒரு கிலா ₹90,000க்கும் விற்பனையாகிறது.
தருமபுரியில் தலித் சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கீரைப்பட்டியில் சின்னையன் நடத்திவரும் சலூன் கடையில் யோகேஷ்வரன் பணி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த தலித் சிறுவன் முடி திருத்தம் செய்ய வந்தபோது யோகேஷ்வரன் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சின்னையன், யோகேஷ்வரன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் படைத்துள்ளார். அவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 45 வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். 44 வெற்றிகளுடன் அடுத்த இடத்தில் உகாண்டாவின் பிரையன் மசாபா இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் 42 வெற்றிகளுடன் தோனியும், ஆறாவது இடத்தில் 41 வெற்றிகளுடன் ரோஹித் ஷர்மாவும் உள்ளனர்.
அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 17,000 நெல் மூட்டைகள் கனமழையில் நனைந்ததாக புகார் எழுந்த நிலையில் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல் மழையில் நனைவதும், இதன் விளைவாக விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நிலைமை இப்படியிருக்க திமுக ஆட்சி சொல்லாட்சியல்ல-செயலாட்சி என முதல்வர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
எளிய மக்களின் வாழ்க்கை கதையை பேசும் இயக்குநர் வசந்த பாலன் தற்போது, `தலைமைச் செயலகம்’ எனும் வெப் சீரிஸில் அரசியலைக் களமாக எடுத்து வந்துள்ளார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதுகுறித்து அவர் கூறும்போது, எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்று கவனத்துடன் இந்த சீரிஸை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழில் கூர்மையான அரசியலைப் பேசும் படம் இதுவரை வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.