News May 13, 2024
காலை 9 மணி வரை 10.35% வாக்குப்பதிவு

4ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா – 9.05%, பிஹார் -10.18%, காஷ்மீர் – 5.07%, ஜார்க்கண்ட் – 11.78%, மத்தியப்பிரதேசம் – 14.97%, மகாராஷ்டிரா – 6.45%, ஒடிசா – 9.23%, தெலங்கானா – 9.51%, உத்தரப் பிரதேசம் – 11.67%, மேற்கு வங்கம் – 15.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் ஆந்திரா – 9.21%, ஒடிசா – 9.25% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Similar News
News December 11, 2025
திமுக எஃகு கோட்டை: வைகோ

திமுகவை யாரும் அசைக்க முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். அமித்ஷா கர்வத்தோடும், அகந்தையோடும் திமுகவை துடைத்தெறிவோம் என கூறி வருகிறார்; ஆனால் அவரைவிட 1000 மடங்கு பலம் கொண்டவர்களாலேயே திமுகவை இதுவரை அசைக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ரத்த தியாகத்தில் வளர்ந்த இயக்கம் திமுக எனவும், அந்த எஃகு கோட்டையை யாராலும் உடைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
News December 11, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை… வந்தது முக்கிய அப்டேட்

அரையாண்டுத் தேர்வு நேற்று முதல் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே குறைந்தது 2 நாள் விடுமுறை வருவதால், நன்றாக பாடங்களை படித்துவிட்டு தேர்வுக்கு செல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் டிச.23-ல் தேர்வு முடியும் நிலையில், டிச.24 – ஜன.4 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 11, 2025
வெளிநாட்டு அணிக்கு பயிற்சியாளராகும் DK

RCB-க்கு ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள தினேஷ் கார்திக், தி ஹன்ட்ரட் தொடரில் அதே அவதாரத்தை எடுத்துள்ளார். ‘லண்டன் ஸ்பிரிட்’ அணிக்குதான் இந்த பணியை அவர் மேற்கொள்ளவுள்ளார். RCB கோப்பையை வெல்ல DK-வும் முக்கிய காரணமாக இருந்ததால், அதேபோன்று ‘லண்டன் ஸ்பிரிட்’ அணியின் வளர்ச்சியிலும் தடம் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக வெளிநாட்டு அணிக்கு கோச்சாக DK நியமிக்கப்பட்டுள்ளார்.


