News March 27, 2024

உச்சத்தில் பங்குச்சந்தை

image

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 72,832 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 107 புள்ளி உயர்ந்து 22,112 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. LIC உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.

News March 27, 2024

தோனி மீதான காதல் எதையும் தாண்டி புனிதமானது

image

குணா படத்தின் பாடலை மேற்கோள் காட்டி தோனியை கவிதை நடையில் ஹர்பஜன் சிங் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக X-இல் பதிவிட்ட அவர், “தமிழ்நாட்டு மக்களை “மஞ்சள் மேல்” பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல் எதையும் தாண்டி புனிதமானது. வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான். இம்முறையும் கோப்பை சிஎஸ்கேவுக்கு தான்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

என்.ஐ.ஏக்கு புதிய தலைவர் நியமனம்

image

தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு புதிய டைரக்டர் ஜெனரலாக ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த்தை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது அதன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் தின்கர் குப்தா, இம்மாதம் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து புதிய தலைவராக சதானந்த் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News March 27, 2024

BREAKING: நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி

image

நாதகவிற்கு வேறு சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் பறிபோனதால், மாற்றுச் சின்னத்தை நாதக கோரியது. இதனையடுத்து அக்கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பதில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என நாதக கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், இனி “மைக்” சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.

News March 27, 2024

வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடி பறிமுதல்

image

வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கேப்ரிகார்னியன் ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ் நிறுவன வளாகம், அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான இடங்களில் E.D. சோதனை நடத்தியது. இதில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது வாஷிங் மெஷினுக்குள் இருந்த கணக்கில் வராத ரூ.2.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 47 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

News March 27, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு ( காலை 10 மணி) 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. மழை பெய்தால், வெயில் தாக்கம் சற்று குறையும் என்பதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News March 27, 2024

தோனி மீதான அன்பை புரிந்து கொள்ள முடியவில்லை

image

தோனி மீதான ரசிகர்கள் அன்பு வியப்பளிப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தோனி வீரர்களின் அறையில் நிற்பதை கேமராமேன் காட்டுகிறார். அதை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தோனியின் மீதான இந்த அன்பை என்னை புரிந்துகொள்ள முடியவில்லை. எப்படி அவருக்கு மட்டும் இது நடக்கிறது என தெரியவில்லை” எனக் கூறினார். முன்னதாக, பல நேரங்களில் இவர் தோனியை விமர்சித்திருந்தார்.

News March 27, 2024

“அதிக வாக்கு வாங்கி கொடுத்தால் 10 சவரன் நகை”

image

தி.மலை மாவட்டம் போளூரில், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது “ஆரணி தொகுதியை உள்ளடக்கிய 6 சட்டமன்றத் தொகுதியில் எந்த தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்று தருகிறார்களோ, அந்த சட்டமன்றத் தொகுதியை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்களுக்கு 10 சவரன் நகை வழங்கப்படும்” என அறிவித்தார்.

News March 27, 2024

பெங்களூரு குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை

image

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இதில் தொடர்புடைய 2 ஐஎஸ் தீவிரவாதிகள், சென்னையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

News March 27, 2024

கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு இன்று விசாரணை

image

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி ED அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதை திரும்ப பெற்றுகொண்ட அவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!