India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை இன்று காலை அவசர வழக்காக விசாரிக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
காதலன் மைக்கேலை யாரேனும் விமர்சித்தால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என நடிகை இலியானா கூறியுள்ளார். என்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்ள முடியும். சமூக வலைத்தளத்தில் என்னை மோசமாக ட்ரோல் செய்தனர். பொதுவெளியாக இருந்ததால் பொறுத்துக்கொண்டேன். ஆனால் எனது காதலர் மற்றும் குடும்பத்தினரை விமர்சித்தால் என்னால் தாங்க முடியாது. எனக்கு குழந்தை பிறந்ததால் வாழ்க்கையே மாறியுள்ளது என்றார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு சுமார் ₹500 கோடியை லாட்டரி மார்டின் நன்கொடையாக கொடுத்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தகவலை 2019ஆம் ஆண்டு விகடன் செய்தியாக வெளியிட்டது. ஆனால், அது பொய் செய்தி எனவும் அவதூறு எனவும் கூறி திமுக வழக்குத் தொடர்ந்தது. ஆனால், தற்போது மார்டின் 500 கோடி ரூபாய் கொடுத்ததை ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், திமுக கூட்டணியில் சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அக்கட்சி அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிபிஎம் சார்பில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2,157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழித் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இணையதளம்: http://ssc.gov.in
இண்டியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்ட அல்காரஸ், 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.9.12 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
➤ பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார் ➤ ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் ➤ அதிமுக – பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. ➤ தென்னிந்திய சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி மீண்டும் தேர்வானார். ➤ WPL தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது பெங்களூரு அணி
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013இல் வெளியான படம் ‘சூது கவ்வும்’. இப்படம் வசூலை குவித்ததுடன், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ஆவது பாகத்தை எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். சூது கவ்வும் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
அதிமுக – பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பிற்கு பின், வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது. இதனிடையே நேற்று பாமக எம்.எல்.ஏ அருள், இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினார். அப்போது, பாமகவுக்கு 7 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர அதிமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.