News May 14, 2024
பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி காலமானார்

பீகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி(72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்வராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
திடீர் கோடீஸ்வரர் அண்ணாமலை? சாடும் CPM

கர்நாடகா, TN-ல் பல ஏக்கர் நிலங்களை அண்ணாமலை வாங்கி குவித்துள்ளதாக CPM மாநில செயலர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டிள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, 246 ஆடம்பர மாளிகைகளை விற்பதற்காக காட்டுவதாகும், அவற்றின் மதிப்பு தலா ₹9 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இப்படி திடீர் கோடீஸ்வரரான ரகசியத்தை அவர் விளக்கி, தான் ஒரு கிளீன் மேன் என்பதை நிரூபிக்க வேண்டும் என பெ.சண்முகம் கூறியுள்ளார்.
News December 6, 2025
Cinema 360°: இன்று ‘வா வாத்தியார்’ டிரெய்லர் ரிலீஸ்

*ஏகன், ஸ்ரீதேவி நடிக்கும் ‘ஹைக்கூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ உலகளவில் ₹118.76 கோடி வசூலித்துள்ளது *ஜிவி பிரகாஷின் புதிய பட டைட்டில் இன்று காலை 11:11 மணிக்கு அறிவிக்கப்படுகிறது * கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டிரெய்லர் இன்று ரிலீசாகிறது *சிலியன் மர்பியின் ‘PEAKY BLINDERS THE IMMORTAL MAN’ நெட்ஃபிளிக்ஸில் 2026 மார்ச் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
News December 6, 2025
Sports 360°: ஸ்குவாஷில் அனாஹத் சிங் சாம்பியன்

*U-21 டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் அனிகேத் மெர் வெள்ளி வென்றுள்ளார் *HCL ஸ்குவாஷ் தொடரில் அனாஹத் சிங் சாம்பியன் *பார்வையற்றோர் WC T20-ல் கலக்கிய வீராங்கனை சிமு தாஸுக்கு ₹10 லட்சம் வழங்கியது அசாம் அரசு *ஊக்க மருத்து சோதனையில் சிக்கிய வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா 16 மாதங்களுக்கு இடைநீக்கம் *பகல் இரவு டெஸ்ட்டில் 1,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மார்னஸ் லபுஸ்சேன் பெற்றுள்ளார்


