India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாதகவிற்கு வேறு சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் பறிபோனதால், மாற்றுச் சின்னத்தை நாதக கோரியது. இதனையடுத்து அக்கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பதில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என நாதக கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், இனி “மைக்” சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.
வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கேப்ரிகார்னியன் ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ் நிறுவன வளாகம், அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான இடங்களில் E.D. சோதனை நடத்தியது. இதில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது வாஷிங் மெஷினுக்குள் இருந்த கணக்கில் வராத ரூ.2.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 47 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு ( காலை 10 மணி) 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. மழை பெய்தால், வெயில் தாக்கம் சற்று குறையும் என்பதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தோனி மீதான ரசிகர்கள் அன்பு வியப்பளிப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தோனி வீரர்களின் அறையில் நிற்பதை கேமராமேன் காட்டுகிறார். அதை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தோனியின் மீதான இந்த அன்பை என்னை புரிந்துகொள்ள முடியவில்லை. எப்படி அவருக்கு மட்டும் இது நடக்கிறது என தெரியவில்லை” எனக் கூறினார். முன்னதாக, பல நேரங்களில் இவர் தோனியை விமர்சித்திருந்தார்.
தி.மலை மாவட்டம் போளூரில், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது “ஆரணி தொகுதியை உள்ளடக்கிய 6 சட்டமன்றத் தொகுதியில் எந்த தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்று தருகிறார்களோ, அந்த சட்டமன்றத் தொகுதியை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்களுக்கு 10 சவரன் நகை வழங்கப்படும்” என அறிவித்தார்.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இதில் தொடர்புடைய 2 ஐஎஸ் தீவிரவாதிகள், சென்னையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி ED அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதை திரும்ப பெற்றுகொண்ட அவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 400 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். ஒருபுறம் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் இன்று 400 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.
ஜவுளி, காகித தொழிலில் மிகப்பெரிய நிறுவனமாக டிரிடென்ட் திகழ்கிறது. அதன் தலைவரான ரஜிந்தர், 9ம் வகுப்பு படிப்பை பாதியில் கைவிட்டவர். அவர் தனது 14 வயதில் ரூ.30க்கு தினக் கூலியாக வேலை பார்த்துள்ளார். 1991ல் கூட்டுத்தொழில் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, டிரிடென்ட் நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது அவருக்கு ரூ.12,368 கோடி, டிரிடென்ட் நிறுவனத்துக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
தேர்தல் பரப்புரையில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி போட்டோ அரசியலை கையில் எடுத்துள்ளன. பிரதமர் மோடி உடன் இபிஎஸ் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி ‘அதிமுக – பாஜக இடையே கள்ள உறவு’ இருப்பதாக உதயநிதி விமர்சித்தார். இதற்கு இபிஎஸ், மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, “நீங்க சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.