News May 14, 2024

ரேவண்ணா இன்று ஜாமினில் விடுதலை

image

ஆள் கடத்தல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ரேவண்ணா இன்று ஜாமினில் விடுதலை ஆக உள்ளார். பெண்ணை கடத்தியதாக கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், ஜாமின் உத்தரவை சிறையில் சமர்பிக்க காலதாமதம் ஆனதால், அவரால் சிறையில் இருந்து நேற்று வெளிவர முடியவில்லை.

Similar News

News December 11, 2025

சென்னை சர்வதேச திரைப்பட விழா.. இன்று தொடக்கம்!

image

இன்று சென்னை சத்யம் தியேட்டரில் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. மொத்தம் 8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்படவுள்ளன. தமிழில் 3BHK, அலங்கு, காதல் என்பது பொதுவுடைமை உள்பட 12 படங்கள் திரையிடப்படுகின்றன. ரஜினியின் 50-ம் ஆண்டு திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக ‘பாட்ஷா’ படமும் திரையிடப்படவுள்ளது.

News December 11, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஸ்பெஷல் அறிவிப்பு

image

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுகளுடன் ரொக்கப்பணம் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ரேஷன் அட்டைதான். இந்நிலையில், ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் ஒரே நாளில் வழங்கும் வகையில், சனிக்கிழமை (13.12.2025) அன்று சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை குடும்ப அட்டைதாரர்கள் மிஸ் செய்யாதீங்க.

News December 11, 2025

BREAKING: டிச.15 முதல் விருப்ப மனு: EPS

image

2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிச.15 – டிச. 23 வரை விருப்ப மனு பெறலாம் என EPS அறிவித்துள்ளார். முதல் நாளான 15-ம் தேதி மட்டும் நண்பகல் 12 மணிக்கு (நல்ல நேரம்) தொடங்குகிறது. மற்ற நாள்களில் காலை 10 – மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெறலாம். மேலும், மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!