News May 14, 2024
கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும்

எதிர்காலத்தில் பெங்களூர் அணிக்கு கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த முறை பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், இந்திய வீரர் ஒருவரை அந்த அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்ற அவர், அது கோலியாக இருந்தால் அணிக்கு நல்லது என்றார். சென்னை அணியில் தோனி தாக்கத்தை ஏற்படுத்துவதை போல, கோலி பெங்களூர் அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனவும் கூறினார்.
Similar News
News December 12, 2025
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
News December 12, 2025
ஏலக்காயின் நன்மைகள்

ஏலக்காய் வெறும் வாசனை மற்றும் சுவை தரும் மசாலா பொருள் மட்டுமல்ல, பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று. இதனை, சூடான பால், தேநீர் ஆகியவற்றில் சேர்த்தோ அல்லது உணவுக்குப் பிறகு மென்றோ சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 12, 2025
U-19 ஆசியக்கோப்பை: முதல் போட்டியில் IND vs UAE மோதல்

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று UAE-ல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள் என மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. துபாயில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா vs UAE மோதுகின்றன. காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. செமிஃபைனல் வரும் 19-ம் தேதியும், ஃபைனல் வரும் 21-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


