India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் எந்த சின்னம் கேட்டிருந்தாலும் கிடைத்திருக்கும். வாசன், தினகரனுக்கு பாஜக கூட்டணி காரணமாகவே அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது. என் வாழ்நாளில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சின்னத்தை காட்டி என்னை முடக்க முடியாது. எந்த சின்னத்தில் நின்றாலும் நாதக வேட்பாளர்கள் வெல்வார்கள் என சீமான் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படையினரை திரும்ப பெறவும், சட்டம் ஒழுங்கு பணியை போலீசாரிடம் திரும்ப ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெறவும் அரசு ஆலோசித்து வருகிறது” என்றார்.
மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். ஆனால், அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக, ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Fliying kiss கொடுத்து கிண்டலடித்த ரோஹித் ஷர்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மார்ச் 24ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில், SRH வீரர் மாயங் அகர்வாலை வீழ்த்திய மகிழ்ச்சியில் KKR வீரர் ஹர்ஷித் ராணா அவருக்கு Flying Kiss கொடுத்து கிண்டலடித்தார். இந்நிலையில், அதனை நினைவூட்டும் விதமாக நேற்று பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவும் அதே போல் Flying Kiss கொடுத்து மாயங் அகர்வாலை கிண்டலடித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கியுள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 3 பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஹாரர் + காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள 4ஆம் பாகத்தை, நடிகை குஷ்பூ தயாரித்துள்ளார். இதில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு கோவை சரளா, சிங்கம் புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பாமக தேர்தல் அறிக்கையை ராமதாசு வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்கவும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பணிகளில் இடைநிலை பணிகளில் 50%, கடைநிலை பணிகளில் 100% தமிழர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்; 10 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் கவின் நடித்து வரும் ‘ஸ்டார்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’ பட இயக்குநர் இலன் இயக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில், படத்தின் மேக்கிங், ஆல்பம், காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் பாடல் உள்ளிட்ட வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 161 மூட்டைகளில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் அசோக்குமார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப பெறுவதே இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்திய பகுதியாகும். அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம் சகோதரர்களும் இந்தியர்கள் தான். அந்த பகுதியை திரும்ப பெறுவதுதான் ஒவ்வொரு இந்தியர், ஒவ்வொரு காஷ்மீர் மக்களின் இலக்காகும்” என்று கூறினார்.
சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் அணிக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிப்படி, ஒரு அணி 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஆனால் நேற்றைய போட்டியில், குஜராத் அணி 90 நிமிடங்களுக்குள் 19 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் கேப்டனானார் ஷுப்மன் கில்.
Sorry, no posts matched your criteria.