India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் பொதுத்தேர்வை, சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். கடைசி தேர்வான இன்று, கணிதம், விலங்கியல், வணிகவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. மேலும், பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் முழு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதற்கட்ட அட்டவணையில் 21 போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 74 போட்டிகள் கொண்ட முழு அட்டவணையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2ஆம் கட்ட போட்டிகள், ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 21- குவாலிபையர் 1, மே 22- எலிமினேட்டர், மே 24- குவாலிபையர் 2, மே 26- இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், வாளி, பலா, திராட்சை ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். இதன்மூலம் அவர் இரட்டை இலை சின்னத்தை கைவிட்டார் என்பது தெளிவாகிறது. இதுநாள் வரை ‘இரட்டை இலை’ சின்னம் எங்களுக்குதான் என்று சொல்லி வந்தவர், தற்போது வேறு சின்னங்களை கேட்டிருக்கிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு வீரப்பன் சமாதியில் அவருடைய மகள் வித்யா ராணி சபதம் எடுத்தார். கிருஷ்ணகிரியில் நாதக சார்பில் போட்டியிடும் அவர், வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, வீரப்பன் சமாதிக்கு சென்று ஆதரவாளர்களுடன் சபதம் எடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், “எனது தந்தையின் கொள்கைகளுடன் இருக்கும் ஒரே தலைவர் சித்தப்பா சீமான்தான். அதனால் தான் அவரது கட்சியில் சேர்ந்தேன்” என்றார்.
காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27,000 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக அம்மாநில பாஜக பொதுச்செயலாளர் அசோக் கவுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், யூனியன் பிரதேசங்களில் பாஜகவின் வளர்ச்சியை நேரடியாக காண முடிகிறது என்றார். இதனால் புல்வாமா, அனந்தநாக் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என ஒரே மாதத்தில் 27,000 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் நெல்லை மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுவரை 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாரகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சித்ரதுர்காவில் உள்ள போவி குர்பிரீத் மடத்திற்குச் சென்ற ராகவேந்திரா, ‘நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல், தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தம்’ என பாஜகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.
எல்லாவற்றுக்கும் ஹர்திக் பாண்டியா தான் காரணமென விமர்சிப்பதை நிறுத்துங்கள். நாங்கள் அணியாக சேர்ந்து தான் முடிவை எடுக்கிறோம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது. இதற்கு, கேப்டன் ஹர்திக் பாண்டியாவே காரணமென சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
குறைந்தபட்ச ஊதியத்திற்கு பதிலாக வாழ்நாள் ஊதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO, வாழ்நாள் ஊதிய முறைக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இந்தியாவும் அங்கம் வகிப்பதால், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை அமலானால் ஊதியம் பன்மடங்கு உயரும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
செந்தில், யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு, ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சங்கர் தயாள் எழுதி இயக்கும் இப்படத்தின் 1st லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. சகுனி படத்தைப் போலவே, இந்தப் படமும் நகைச்சுவை + அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ளது. நடிகர் செந்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.