News March 16, 2024

தேர்தல் நடத்தை விதிகள் அமலானது

image

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் உள்ள படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், பொதுவெளியில் உள்ள தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டு வருகிறது.

News March 16, 2024

4 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

image

ஆந்திரா, அருணாச்சல் உள்ளிட்ட 4 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா மாநில சட்டசபைகளுக்கு மே மாதம் 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கு ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 4 மாநில சட்டசபைகளுக்கும் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஜூன் மாதம் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

News March 16, 2024

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல்

image

*முதல்கட்ட தேர்தல் – ஏப்ரல் 19 – தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் (UT).
*2ஆம் கட்ட தேர்தல் – ஏப்ரல் 26 – 13 மாநிலங்கள்/ UT
*3ஆம் கட்ட தேர்தல் – மே 7 – 12 மாநிலங்கள்/ UT
*4ஆம் கட்ட தேர்தல் – மே 13 – 10 மாநிலங்கள்/ UT
*5ஆம் கட்ட தேர்தல் – மே 20 – 8 மாநிலங்கள்/ UT
*6ஆம் கட்ட தேர்தல் – மே 25 – 7 மாநிலங்கள்/ UT
*7ஆம் கட்ட தேர்தல் – ஜூன் 1 – 8 மாநிலங்கள்/ UT

News March 16, 2024

இன்று முதல் அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள் (2)

image

4. பேரணி, ஊர்வலம், கூட்டத்தை நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். 5. 50,000 ரூபாய்க்கு மேல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. 6.அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம், பரிசுப்பொருள் அளிக்கக் கூடாது. 7. வழிபாட்டு இடங்கள், பதற்றமான இடங்கள் & தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கூட்டம் நடத்தக் கூடாது. 8. மதம், மொழி, இனம் சார்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது.

News March 16, 2024

விளவங்கோடு இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பதவி விலகியதால் இத்தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் விளவங்கோடு இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.

News March 16, 2024

இன்று முதல் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் (1)

image

2024 மக்களவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணி அளவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு . அதன்படி, 1. மத்திய, மாநில அரசுகளால் புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது. 2. புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. 3. அனுமதி பெறாமல் கட்சி கொடி, பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்க முடியாது.

News March 16, 2024

முதல்கட்ட தேர்தலில் தமிழ்நாடு

image

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், முதல்கட்டமாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலும் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் முன்னதாகவே தேர்தல் முடிந்துவிடும்.

News March 16, 2024

BREAKING: வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு

image

நாடு முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – மார்ச் 20,
வேட்புமனு தாக்கல் நிறைவு – மார்ச் 27,
வேட்புமனு பரிசீலனை – மார்ச் 28,
திரும்பப் பெற கடைசி தேதி – மார்ச் 30,
வாக்குப் பதிவு – ஏப்ரல் 19,
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4.

News March 16, 2024

BIG BREAKING: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது

image

2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை உடனுக்குடன் பெற Way2News செயலியுடன் இணைந்திருங்கள்.

News March 16, 2024

சலுகைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும்

image

தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் (திங்கள்கிழமை தோறும்) நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது. தனிநபர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும். அத்துடன் விவசாயிகள், மீனவர் கோரிக்கை தினக் கூட்டங்கள் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது.

error: Content is protected !!