News May 14, 2024

கடைசி இடம் பெற்ற 10 மாவட்டங்கள்

image

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், வேலூர் மாவட்டம் 84.40% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. திருவள்ளூர் – 85.54%, கள்ளக்குறிச்சி – 86.00%,
மயிலாடுதுறை- 86.39%, திருப்பத்தூர் – 86.88%, காஞ்சிபுரம் – 86.98%, திருவாரூர் – 87.15%, கிருஷ்ணகிரி – 87.82%, ராணிப்பேட்டை – 87.86%, புதுக்கோட்டை – 88.02%

Similar News

News December 14, 2025

மகளிர் உரிமைத் தொகை உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

image

மகளிர் உரிமைத்தொகை மேலும் உயரும் என கூறியிருந்தேன், அது நிச்சயமாக நடக்கும் என மீண்டும் CM ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார். டிச.12-ல் ₹1,000 மகளிர் உரிமைத்தொகை 2-ம் கட்ட விரிவாக்க நிகழ்வில் பேசிய ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகையும் உயரும், மகளிரின் உரிமையும் உயரும் என கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறியுள்ளதால் மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

News December 14, 2025

குளிர்காலத்தில் இந்த சூப்களை டிரை பண்ணுங்க

image

சூப் குடிப்பதால் செரிமானம் மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. குளிர்காலங்களில் சூப் குடிப்பது, உடலை இதமாக வைத்திருக்க உதவும். பலவகையான சூப்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த சூப் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News December 14, 2025

இளம் பெரியார் உதயநிதி: அமைச்சர் எ.வ.வேலு

image

தனது பிறந்தநாளில் கருப்பு உடை அணிந்த மற்றொரு இளம் பெரியார் உதயநிதி என அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டியுள்ளார். திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அவர், திராவிட இயக்கத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்கு உதயநிதி எடுத்துச் செல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவின் 5-வது தலைமுறையாக உதயநிதி உருவெடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!