India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் கலந்து கொண்ட 84 வயதான கவுண்டமணி 8 மணிநேரம் தொடர்ந்து டப்பிங் பேசியுள்ளார். அரசியலை நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும், யோகி பாபுவும் நடித்துள்ளனர்.
சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். சோமாலியா கடற்கொள்ளையர்களால் வணிக கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரபிக் கடலில் ரோந்து சென்ற இந்திய கடற்படையினர், கொள்ளையர்கள் சென்ற ரூயென் கப்பலை தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக இருந்த 17 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன், 35 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான WPL இறுதிப்போட்டி, டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால், அருண் ஜெட்லீ மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. போட்டியை காண சுமார் 23,190 பார்வையாளர்கள் இன்று மைதானத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இணையான ரசிகர் கூட்டத்தை, WPL தொடரும் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
நாடே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 – ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. NDA கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது உறுதியான நிலையில், INDIA கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. காங்., தலைவர் கார்கேவை சிலர் பரிந்துரைத்ததாக தகவல் வெளியானாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடன இயக்குநர் பிரதிக் என்பவருடன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையான நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி விளக்கமளித்துள்ளார். அதில், “நானும் ஒரு பெண் தான். என்னை பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திவிடுங்கள். இதுபோன்ற மீம்ஸ் மற்றும் டிரோல் என்னை பாதிக்காது. விமர்சிப்பதற்கு முன்பு கொஞ்சமாவது சிந்தியுங்கள். சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
சீட்டுக்கும், ரூபாய் நோட்டுக்கும் பேரம் பேசினால் கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்படத்தான் செய்யும் என அதிமுகவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மறைமுகமாக சீண்டியுள்ளார். பாஜகவுக்கு எதிராக உள்ள மாநிலம் என்பதால் தான் தமிழகத்தில் மட்டும் சீக்கிரமாக தேர்தல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பாஜக வெற்றி பெறக்கூடிய மாநிலங்களில் மட்டும் பல கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளதாக விமர்சித்தார்.
வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், பைக் மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர் திசையில் வந்த லாரி மீதும் மோதியது. இதில் 21 பேர் பலியான நிலையில், 38 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 11 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், பெங்களூரு அணிக்கு 114 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணி, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி வந்தது. 8ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த பின்னர், அடுத்தடுத்த விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்து 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பெங்களூரு அணி வெற்றி பெறுமா?
ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவு விழா மும்பையில் நடைபெறுகிறது. இதில், I.N.D.I.A. கூட்டணியில் உள்ள தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், முக்கியத் தலைவர்களாக கருதப்படும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கவில்லை. மம்தா பானர்ஜி உடல்நலக் குறைவால் பங்கேற்காத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி தடுமாறி வருகிறது. முதலில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த டெல்லி அணி, 8ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், பவுண்டரி எதுவும் அடிக்காமல் நிதானமாக விளையாடி வந்த டெல்லி அணி, 13ஆவது ஓவரில் மீண்டும் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி வருகிறது. சோஃபி-3, ஷ்ரேயங்கா, ஆஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.