News March 17, 2024

அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

image

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை இவ்வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது.

News March 17, 2024

பிரதமர் மோடி கொடுத்ததே அதிகம்

image

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை விட பிரதமர் மோடி அளித்த நிதியே அதிகம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு பல சிறப்பு திட்டங்களை மோடி அறிவித்துள்ளதாக கூறிய அவர், பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, பிரதமரை அமைச்சர் உதயநிதி 28 பைசா என விமர்சனம் செய்திருந்தார்.

News March 17, 2024

அஷ்வினுக்கு சிறப்பு பரிசு

image

டெஸ்டில் பல சாதனைகள் படைத்த அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கௌரவிக்கும் பொருட்டு அவருக்கு தங்க நாணயங்களால் 500 என வடிவமைக்கப்பட்ட சிறப்பு பரிசை வழங்கி கௌரவித்துள்ளது. டெஸ்டில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்திய அஷ்வினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 17, 2024

21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக

image

நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சி, அரக்கோணம், தி.மலை, வேலூர், கடலூர், தருமபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாற்றமும் இருக்கலாம்.

News March 17, 2024

நாளை தேர்தல் வைத்தாலும் அபார வெற்றி பெறுவோம்

image

திண்டுக்கல் எம்.பி தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அபார வெற்றி பெறுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் சிபிஎம்-க்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கியதாக கூறிய அவர், நாளைக்கு தேர்தல் வைத்தாலும் வெற்றியை பெற்றுத் தருவோம் என்று சூளுரைத்தார். முன்னதாக 2019 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2024

மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும் துர்க்கை வழிபாடு

image

வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட்டால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையன்று, ராகு கால நேரமான காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மன் முன்பு நல்லெண்ணெய், நெய்யில் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதுபோல வழிபட்டு வந்தால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். தீராத துன்பங்களும் விலகும்.

News March 17, 2024

இறுதியானது அதிமுக – தேமுதிக கூட்டணி?

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதிமுக – தேமுதிக இடையே 2 கட்டமாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்த நிலையில், நேற்றிரவு நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், மாநிலங்களவை பதவி குறித்து தேர்தலுக்கு பின்பு நல்ல முடிவு எடுப்பதாக அதிமுக உறுதியளித்ததாகவும் தெரிகிறது.

News March 17, 2024

நடிகர் சேஷூ சிகிச்சைக்கு பண உதவி கேட்கும் இயக்குநர்!

image

பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டி சினிமா பிரபலங்கள் பலரும் பிரார்த்தித்து வருகின்றனர். இந்நிலையில், டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் பாபு, சேஷூவின் சிகிச்சைக்கு ரசிகர்களிடம் பண உதவி கேட்டு உருக்கமாக டிவீட் செய்துள்ளார். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பண உதவி அளித்து வருகின்றனர்.

News March 17, 2024

அந்த துடைப்பம் எங்ககிட்ட தன் இருக்கு

image

தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சிகள் துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கூட்டணியை துடைத்து எறிய பிரதமருக்கு துடைப்பம் தேவை. ஆனால், அந்த துடைப்பமே (ஆம் ஆத்மி சின்னம்) எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறது என கூறியுள்ளார். I.N.D.I.A கூட்டணியில் காங்., திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2024

காங்கிரஸ் கட்சி இல்லையெனில் நாடு இல்லை

image

காங்கிரஸ் இல்லையெனில், நாடு இல்லை என்று உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா பிரிவு எம்பியான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ் இல்லையெனில், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருக்காது. இதுபோல பலவற்றை பாஜக கவனத்தில் கொள்ளவில்லை. ஏனெனில் பாஜக, தொழிலதிபர்கள் குறித்து மட்டும் சிந்திக்கிறது” என்றார்.

error: Content is protected !!