News March 17, 2024

கார்- லாரி மோதி விபத்து; 2 பேர் பலி

image

தேனி அருகே காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணித்த கல்வி அதிகாரி சங்கு முத்தையா என்பவரும் கார் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த லாரி ஓட்டுநரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

News March 17, 2024

கேட், வில்லியம் தம்பதியர் இடையே விரிசல்?

image

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் தம்பதியிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாடல் அழகி ஹேன்பரியுடன் வில்லியமுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், பிறகு வேறு ஒருவரை ஹேன்பரி திருமணம் செய்து கொண்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. 3 பிள்ளைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட கேட், இளவரசருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இதை வைத்து, விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

News March 17, 2024

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘ரசமலாய்’

image

உலகின் சிறந்த சீஸ் இனிப்பு உணவு வகைகளின் பட்டியலை ‘டேஸ்ட் அட்லஸ்’ (Taste Atlas) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் ‘ரசமலாய்’ 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் போலந்து நாட்டின் ‘செர்னிக்’ (Sernik) உணவு இடம்பிடித்துள்ளது. வாயில் வைத்ததும் கரையக்கூடிய ரசமலாய், பெங்காலி இனிப்பு உணவாகும். முற்றிலும் பாலை வைத்தே செய்யப்படும் இது, பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு உணவாகவும் உள்ளது.

News March 17, 2024

சென்னை வந்தடைந்த CSK வீரர்கள்

image

2024 ஐபிஎல் தொடருக்காக, CSK வீரர்கள் (நியூசிலாந்து) ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். டேவன் கான்வே, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதற்காக தீவிர பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணி, முதல் போட்டியில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News March 17, 2024

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6.05 கோடி பெற்ற அதிமுக

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக ரூ.6.05 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதுதொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில்,” தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக ரூ.6.05 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.5 கோடி அளித்துள்ளது. சமாஜ்வாதி ரூ.14.05 கோடி, அகாலிதளம் ரூ.7.26 கோடி நன்கொடை பெற்றுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.

News March 17, 2024

அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை

image

சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ அருள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்மூலம், அதிமுக – பாமக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவது உறுதியாகியிருக்கிறது. அதேநேரம், பாமக பாஜகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பாமக நாளை வெளியிடும் என்று தெரிகிறது.

News March 17, 2024

புதிய சாதனைப் படைத்தார் இந்திய தடகள வீரர்

image

கலிபோர்னியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீரர் புதிய சாதனையை படைத்துள்ளார். ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், இந்தியாவின் குல்வீர் சிங் 27.41.81 நிமிடங்களில் இலக்கை அடைந்து 2ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் 2008ஆம் ஆண்டு பதிவான இந்தியாவின் சுரேந்திர சிங் (28:02.89) சாதனையை முறியடித்தார். இருப்பினும், 41 வினாடிகள் தாமதமானதால் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை தவறவிட்டார்.

News March 17, 2024

ரூ.1,397 கோடி நன்கொடை பெற்ற திரிணாமுல்

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் 2வது அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதற்கடுத்து, காங்கிரஸ் கட்சி 3வது அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,334 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 4ஆவது அதிகபட்சமாக சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1,332 கோடி பெற்றுள்ளது. பிஜேடி ரூ.944 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.442 கோடியும், டிடிபி ரூ.181 கோடியும் பெற்றுள்ளன.

News March 17, 2024

FLASH: பிக்பாஸ் வெற்றியாளர் கைது

image

இந்தி பிக்பாஸ் OTT 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் நொய்டா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபரான இவர், பாம்பு விஷத்தை அனுமதியின்றி விற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்விஷ் சில மியூசிக் வீடியோக்களிலும் நடித்து வட இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளார். இந்நிலையில், இவரது கைது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

News March 17, 2024

படம் ஓடாததால் அரசியலில் இருந்து விலகினேன்

image

கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அரசியலில் இருந்து விலகியதாக நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 1989-ல் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய பாக்யராஜ், சில ஆண்டுகளில் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இதற்கு தொழில் பாதிக்கப்பட்டதும், கட்சி ஆரம்பித்த பிறகு படம் சரியாக ஓடாத காரணத்தாலும், அரசியலில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!