News May 14, 2024

பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட குஜராத் அணி

image

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியது. 63ஆவது லீக் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. ஆனால், அங்கு கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இன்றைய லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், 2024 ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

News May 14, 2024

இன்று +1 தேர்வு முடிவுகள்

image

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் படித்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வினை சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். மாணவர்கள், www.tnresult.nic.in என்ற இணையத்தில் அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

image

ஐ.பி.எல் தொடரில் இன்று டெல்லி – லக்னோ அணிகள் மோதுகின்றன. டெல்லி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. லக்னோ 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

News May 14, 2024

மனைவியை விவாகரத்து செய்தார் ஜி.வி.பிரகாஷ்

image

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜி.வி. தனது காதலியான பாடகி சைந்தவியை 2013இல் திருமணம் செய்துக் கொண்டார். 11 ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த நிலையில், மன அமைதியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பரஸ்பர மரியாதையை மனதில் வைத்து இருவரும் பிரிவதாகவும், இந்த கடினமான நேரத்தில் அனைவரின் ஒத்தழைப்பு தேவை எனவும் ஜி.வி. தெரிவித்துள்ளார்.

News May 14, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு
➤ புதிய ஆட்சியில் சிறையில் இருந்து வெளிவருவேன் – கெஜ்ரிவால்
➤ பாஜக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை – ராகுல்
➤பாகிஸ்தானுக்கு வளையல் அனுப்புவோம் – மோடி
➤ நடிகர் சங்கத்திற்கு ₹1 கோடி வழங்கினார் தனுஷ்
➤ பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட குஜராத்

News May 14, 2024

கேப்டனை மாற்றும் திட்டம் இல்லை

image

லக்னோ அணியில் தற்போதைக்கு கேப்டன்சியில் மாற்றம் இல்லை என அந்த அணியின் துணை பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் தெரிவித்துள்ளார். லக்னோ உரிமையாளரும், கே.எல்.ராகுலும் மைதானத்தில் பேசியதில் எவ்வித தவறும் இல்லை என்ற அவர், அதை ஆரோக்கியமான விவாதமாகவே பார்க்க வேண்டும் என்றார். ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, லக்னோ அணி உரிமையாளர், கேப்டன் கே.எல்.ராகுலை கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும்

image

எதிர்காலத்தில் பெங்களூர் அணிக்கு கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த முறை பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், இந்திய வீரர் ஒருவரை அந்த அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்ற அவர், அது கோலியாக இருந்தால் அணிக்கு நல்லது என்றார். சென்னை அணியில் தோனி தாக்கத்தை ஏற்படுத்துவதை போல, கோலி பெங்களூர் அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனவும் கூறினார்.

News May 14, 2024

ரேவண்ணா இன்று ஜாமினில் விடுதலை

image

ஆள் கடத்தல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ரேவண்ணா இன்று ஜாமினில் விடுதலை ஆக உள்ளார். பெண்ணை கடத்தியதாக கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், ஜாமின் உத்தரவை சிறையில் சமர்பிக்க காலதாமதம் ஆனதால், அவரால் சிறையில் இருந்து நேற்று வெளிவர முடியவில்லை.

News May 14, 2024

50 வயது வரை கிரிக்கெட் விளையாட வேண்டும்

image

ரோஹித் 50 வயது வரை கிரிக்கெட் விளையாட வேண்டும் என முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 37 வயதை தாண்டிய வீரர்களை இந்தியாவுக்காக தேர்வு செய்யக்கூடாது என்ற கோட்பாட்டை பிசிசிஐ மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், திறமைக்கு வயது தடையாக இருக்க கூடாது என்றார். வயதை அடிப்படையாக வைத்து வீரர்களை தேர்ந்தெடுக்கும் முறை அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

News May 14, 2024

2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

image

தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சீபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!