News May 15, 2024

வரலாற்றில் இன்று

image

➤221 – சீன ராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.
➤1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
➤1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின.
➤1851 – நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
➤2013 – ஈராக்கில் ஏற்பட்ட வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.

News May 15, 2024

சல்மான் கான் வீட்டில் தாக்குதல், மேலும் ஒருவர் கைது

image

நடிகர் சல்மான்கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பாந்திராவில் உள்ள சல்மான் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய 2 பேரை ஏப்ரல் 16ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு துப்பாக்கியை வழங்கியதாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News May 15, 2024

ஜெய் ஷாவுக்கு எல்லா தகுதியும் உள்ளது: அனுராக் தாக்கூர்

image

ஜெய் ஷாவுக்கு தகுதி இருப்பதால் தான், பிசிசிஐ செயலாளராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிரபலமான ஒருவரின் மகனாக பிறப்பது குற்றம் அல்ல என்று கூறிய அவர், ஜெய் ஷா பதவியேற்ற பிறகு, கிரிக்கெட்டுக்காக பல நல்ல விஷயங்களை செய்திருப்பதாக பாராட்டினார். ஜெய் ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பாஜக தற்போது விளக்கமளித்துள்ளது.

News May 15, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
◾விளக்கம்: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்

News May 15, 2024

சர்க்கரை நோயாளிகள் சின்ன வெங்காயம் சாப்பிடலாமா?

image

சின்ன வெங்காயத்தில் க்வேர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமா இருப்பதால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், சின்ன வெங்காயத்தில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். சின்ன வெங்காயம் சாப்பிடுறது சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய நன்மைகள் தருகிறது ஆனால், எவ்வளவு சாப்பிடலாம், எப்படி சாப்பிடலாம் என்பதை மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

News May 15, 2024

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சிறப்பாக ஆடுவார்

image

டி20 உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார். ஐசிசி தொடர்களில் ரோஹித் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், வருகிற டி20 உலகக் கோப்பையிலும் அது எதிரொலிக்கும் என்றார். நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித்தின் ஆட்டம் பெரிய அளவில் சிறப்பாக இல்லை. மேலும், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, அவர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News May 15, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News May 15, 2024

வங்கி மோசடி வழக்கில் தீரஜ் வாத்வான் கைது

image

வங்கி மோசடி வழக்கில் தீவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவன முன்னாள் இயக்குனர் தீரஜ் வாத்வானை சிபிஐ கைது செய்துள்ளது. 17 வங்கிகளில் ₹34 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக 2023இல் சிபிஐ அவரை கைது செய்தது. ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியதால், அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். இந்நிலையில், ஜாமினை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமினை ரத்து செய்தது.

News May 15, 2024

ஹரியானாவில் பாஜக அரசு தப்புமா?

image

ஹரியானாவில் முதல்வர் நயாப்சிங் சைனி அரசு மீது எம்.பி தேர்தலுக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பாஜகவை ஆதரித்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேர், ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பாஜக ஆட்சி தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

News May 15, 2024

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு

image

கிராம்பில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகளை குறைத்து, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இன்ஃப்ளுயன்சா மற்றும் டெங்கு கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும், வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.

error: Content is protected !!