News April 4, 2025

Good Bad Ugly டிரெய்லர்.. இன்னைக்கு ரிலீஸ்!

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

News April 4, 2025

BREAKING: அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

image

அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நேரமில்லா நேரத்தில், பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பேச, சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக் கூறி அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் தற்போது வெளிநடப்பு செய்தனர்.

News April 4, 2025

பசு சாணம் மூலம் ₹400 கோடி வருமானம்!

image

உலகளவில் பசு சாணத்திற்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பசு சாணம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில், பனை மரங்களை வளர்க்க பசுவின் சாணப் பொடியை பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பல பொருட்களைத் தயாரிக்க பசுவின் சாணம் பயன்படுவதால் இதன்மூலம் ₹400 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 4, 2025

பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

image

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் முக்கிய சின்னமாக இருந்தவர் எனவும் தனது தேசபக்தி ஆர்வத்தினை திரைப்படங்களில் பிரதிபலித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உன்னத கலைஞர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த நடிகர் மனோஜ் குமார், பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தது கவனிக்கத்தக்கது.

News April 4, 2025

வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹4,000 குறைவு

image

சென்னையில் வெள்ளி விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் கிராமுக்கு ₹4 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹108க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,08,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 1ஆம் தேதி வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு கிராம் ₹114க்கு விற்பனையான நிலையில், 2 நாள்களில் மட்டும் கிராமுக்கு 6 ரூபாயும், கிலோவுக்கு ₹6,000 ரூபாயும் சரிந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?

News April 4, 2025

லாபம் அடைந்தது BSNL

image

18 ஆண்டுகளுக்கு பிறகு BSNL முதல் முறையாக லாபம் ஈட்டியுள்ளது. கடந்த அக்., – டிச., காலாண்டில் ₹262 கோடி லாபம் ஈட்டியுள்ளது; அதே காலாண்டில் செயல்பாட்டு லாபமாக ₹1,500 கோடியையும் ஈட்டியுள்ளது. 2023-24ஆம் ஆண்டின் இதே காலாண்டில் அந்நிறுவனம் ₹1,262 கோடி நஷ்டத்தை சந்தித்தது. குறைந்த அளவில் ரீசார்ஜ் திட்டம் போன்ற நடவடிக்கைகளால், கடந்த 6 மாதங்களில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் BSNL-யில் இணைந்துள்ளனர்.

News April 4, 2025

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹1,280 குறைந்தது

image

தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,280 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,400க்கும், சவரன் ₹67,200க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் திடீரென சரிவைக் கண்டுள்ளது. இது, நகை வாங்க நினைத்தவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. உலக நாடுகள் மீதான USA வரி விதிப்பால் அந்நாட்டின் பங்குச்சந்தை கடும் சரிவை கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News April 4, 2025

நாட்டை படுகுழியில் தள்ளும் மோடி அரசு: சோனியா சாடல்

image

வக்ஃப் திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என சோனியா காந்தி விமர்சித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பாஜகவின் சதி எனவும் அவர் சாடியுள்ளார். கல்வி, சிவில் உரிமைகள் என எதுவானாலும், மோடி அரசு நாட்டைப் படுகுழியில் தள்ளுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News April 4, 2025

அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!

image

உலக நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்ததன் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. Dow nosedives 1,679 புள்ளிகளும், Nasdaq 500 புள்ளிகளும் சரிவைக் கண்டதால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர். டிரம்ப் தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் அமெரிக்க பொருளாதாரமும், மக்களும் கடும் இன்னல்களை சந்திக்க நேரிடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

News April 4, 2025

வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம்: மோடி

image

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்புமுனை தருணம் என்று மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேடல் இது. நீண்ட காலமாக குரல் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்காக வக்ஃப் மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரு வலுவான, இரக்கமுள்ள, உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!