News May 14, 2024

மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

News May 14, 2024

பி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்

image

விண்ணப்பித்த 3 நாள்களில் இனி பி.எஃப்., அட்வான்ஸ் பெறும் வகையில், தானியங்கி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020இல் கொரோனா பாதிப்பின் போது தானியங்கி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பி.எஃப் தொகையை பெற முடியும். இந்நிலையில், தற்போது கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக பி.எஃப்., தொகையில் அட்வான்ஸ் பெறுவதும் தானியங்கி முறையாக மாற்றப்பட்டுள்ளது.

News May 14, 2024

ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவு

image

உலகக் கோப்பை பயிற்சிக்காக இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்புவதால், ஐபிஎல் அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜாஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ஃபில் சால்ட், மொயின் அலி உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் தொடரில் இருந்து விலகுவதால், CSK, RR, KKR, SRH போன்ற அணிகள் எஞ்சியுள்ள போட்டிகளில் தடுமாற வாய்ப்புள்ளது. எந்த இங்கி., வீரரால் பெரும் பின்னடைவு ஏற்படும்?

News May 14, 2024

பிறப்பால் கிறிஸ்தவர்., தற்போது வாரம் ஒரு கோயில்

image

நடிகை நயன்தாரா, பெங்களூருவில் பிறந்தவர் என்றாலும், கேரள மாநிலம் திருவில்லாவை பூர்விகமாக கொண்டவர். டயானா மரியம் குரியன் என்ற பெயரில் கிறிஸ்தவராகவே வளர்ந்த அவர், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது கிறிஸ்தவராகவே இருந்தார். பின்னர், 2011ஆம் ஆண்டு சென்னையில் அவர் தன்னை இந்து மதத்தில் இணைத்துக் கொண்டார். அன்று முதல் இன்று வரை தவறாது கோயில் கோயிலாக சென்று வருகிறார்.

News May 14, 2024

11ஆம் வகுப்பு மறுதேர்வு தேதி அறிவிப்பு

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், 8,11,172 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,39,539 பேர் (91.17%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் மறுதேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News May 14, 2024

மே 21இல் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

image

தமிழ்நாட்டிற்கு கர்நாடகா உரிய நீர் திறக்காத நிலையில், டெல்லியில் மே 21ஆம் தேதி எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. மேட்டூர் அணையில் 50 அடிக்கு மட்டுமே நீர் உள்ளதால், டெல்டா விவசாயிகளுக்கு நீர் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் கர்நாடகாவும் நீர் திறக்க மறுப்பதால், காவிரி மேலாண்மை ஆணையத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 14, 2024

கவுண்டமணிக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி

image

நடிகர் கவுண்டமணிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கவுண்டமணியின் 5 கிரவுண்ட் நிலம், ₹65 லட்சத்தையும் அவரிடமே கொடுக்கும்படி அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலத்தைக் கவுண்டமணியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

News May 14, 2024

FLiRT கொரோனாவின் அறிகுறிகள்

image

FLiRT என்ற புதிய வகை கொரோனா இந்தியாவில் இதுவரை 91 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், இருமல், தலை மற்றும் உடல் வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். அதேபோல், சிலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். எனவே, மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 14, 2024

FLiRT வகை கொரோனா ஆபத்தானதா?

image

இந்தியாவில் தற்போது பரவிவரும் FLiRT வகை கொரோனா வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் ஆய்வாளர்களிடம் இல்லை. ஆனால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி உடலினை தாக்கும் திறன் கொண்டவை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களில் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே FLiRT வகை தொற்று உள்ளதால், இதன் வீரியத் தன்மை குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

News May 14, 2024

புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள் புகுந்தது

image

FLiRT என்று சொல்லப்படக் கூடிய புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் அதிகம் பரவி வருகிறது. ஓமிக்ரான் வைரசின் துணை வகையான இந்த FLiRT, ஜனவரி மாதம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தானே, புனே, நாசிக் என பல நகரங்களில் 91 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை பதிவாகியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் பரவி வருகிறது.

error: Content is protected !!