India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் ஆச்சரியமளிப்பதாக ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் உள்ளிட்ட சிலரை தவிர மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற அவர், தொடர் தோல்வி வீரர்களுக்கு மன ரீதியாக பின்னடைவை கொடுக்கும் என்றார். பிளே ஆஃப் சுற்றுக்கான அந்த ராஜஸ்தான் அணி தகுதி பெற்ற நிலையில், கடைசி 4 போட்டிகளில் அந்த தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
பிரதமர் மோடி அவதூறு பரப்புரை மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 4 கட்ட வாக்குப்பதிவில் பாஜகவுக்கான ஆதரவு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக மோடி வாய்க்கு வந்ததை எல்லாம் பரப்புரையில் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் மோடி கூறி வருவதற்கு மக்கள் தேர்தலில் தண்டனை கொடுப்பார்கள் என்றார்.
இன்று (மே 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்த நிலையில், இன்று மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.
✦முதலில் கற்பனை செய்து கவலைப்படுவதை நிறுத்துங்கள்.
✦ கடந்த நாட்களை எண்ணி கவலைப்படாதீர்கள்.
✦எதார்த்தத்தை சிந்திக்க முயற்சியுங்கள்.
✦முடிந்த அளவுக்கு தனிமையை தவிருங்கள். ✦மகிழ்ச்சியான தருணங்களை ரசியுங்கள். ✦கவலையுடன் இருக்கும் போது, சமூக வலைதளங்களை கையாளாதீர்கள்
✦தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள்
பிரதமர் மோடி மக்களை 10 ஆண்டுகளாக அவதிக்குள்ளாக்கி வருவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் சீரழித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், மோடியின் திசை திருப்பும் முயற்சியை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள் என்றார். 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தும், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என பலகோடி பேர் வேலை வாய்ப்புகள் இன்றி அவதிப்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.
இன்று (மே 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ தமிழகம் முழுவதும் பரவலாக மழை
➤ பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது – மம்தா
➤ அரண்மனையில் இருப்பவர்கள் மக்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள் – மோடி
➤ மக்களை பிளவுப்படுத்தி வெற்றி பெற பாஜக முயல்கிறது- ராகுல்
➤ வட மாநிலங்களில் பாஜக தோல்வி அடையும் – கெஜ்ரிவால்
➤ பிளே-ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி தகுதி
திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்
Sorry, no posts matched your criteria.