India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், மேஷம், மிதுனம், கடகம், மகர ராசியினருக்கு பண மழை கொட்டப் போகிறது. குறிப்பாக, அபரிமிதமான பண வரவு, நகை, ஆடம்பர பொருள்கள், வீடு, நிலம் வாங்கும் யோகம், ஊதிய உயர்வு, உயர்ந்த பதவியில் பணி மாறுதல், பெற்றோர், உறவினர்களின் ஆதரவு போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், கேமிங் துறை சார்ந்த பங்குகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பட்ஜெட்டில் கேமிங் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவுவதுதான். எதிர்பார்த்தபடி, ஜிஎஸ்டி வரி குறைந்தால், கேமிங் துறை சார்ந்த நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என்பதால், அத்துறை பங்குகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை மாதந்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வாளர்களுக்கு, பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை விநியோகிப்பதில் கவனம் தேவை என அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த 20 நாள்களில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், வீடு இல்லாத ஏழை எளியோருக்கு தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கி, வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களையும் தவெக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பப்புவா நியூ கினியா 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக சார்லஸ் அமினி 17 ரன்கள் எடுத்தார். நியூசி., சார்பில் சிறப்பாக பந்துவீசிய பெர்குசன் 4 ஓவர்கள் வீசி ரன்கள் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். போல்ட், சௌதி, சோதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மூலதன பொருட்களின் விலை உயர்வு காரணமாக, FMCG பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களில், சோப்பு, பாடி வாஷ் ஆகியவை 2% முதல் 9% விலை உயர்ந்துள்ளன. ஹேர் ஆயில் 8% முதல் 11% வரையிலும், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலை 3% முதல் 17% வரையிலும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பால், சர்க்கரை, பாமாயில், காபி தூள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளன.
மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘குட் நைட்’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விநாயக் சந்திரசேகரனுக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக் போன்ற நெருங்கிய நடிகர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். மணமக்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பைகுரி அருகே இன்று காலை கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியானார்கள். இதில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு ரயில்வே துறையின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன்கள் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டை (W,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,W,0,0,0,0,0,W,0,0,0,0) கைப்பற்றினார். இதற்கு முன் இதுவரை யாரும் இப்படியொரு சாதனையை படைத்ததில்லை. டி20 வரலாற்றில் இதுவே முதல்முறை.
டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ₹24.50 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் 2024ஐ தமிழக அரசு சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தது.
Sorry, no posts matched your criteria.