News June 17, 2024

‘குட் நைட்’ பட இயக்குநருக்கு திருமணம் முடிந்தது

image

மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘குட் நைட்’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விநாயக் சந்திரசேகரனுக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக் போன்ற நெருங்கிய நடிகர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். மணமக்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News January 20, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.20) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News January 20, 2026

உளுந்து, பச்சைப்பயறுக்கு அரசு ஆதரவு விலை அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு மற்றும் உளுந்தை அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதன்படி பச்சைப்பயறு கிலோ ரூ.87.68-க்கும், உளுந்து ரூ.78-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News January 20, 2026

விபத்தில் சிக்கிய அக்‌ஷய் குமாரின் பாதுகாப்பு கார்

image

மும்பை ஜூஹுவில் ஒரு மெர்சிடிஸ் கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளனது. இதில், அந்த ஆட்டோ அக்‌ஷய் குமார் பாதுகாப்பு சென்ற கார் மீது மோதியது. அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னா வேறொரு காரில் இருந்ததால், அவர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!