India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் தபால் வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்தொகுதியின் MLA புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து அங்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசாருக்கு தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சன் டிவியில் இரவில் 9 மணிக்கு ஒளிபரப்பாகி சக்கைப் போடு போட்ட எதிர்நீச்சல் நாடகம் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து 2ஆம் பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், அது சன் டிவிக்கு பதிலாக வேறு டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அந்தத் தொடரில் நாயகியாக நடித்த மதுமிதாவிடம் கேட்டபோது, எதுவும் இன்னும் உறுதியாகவில்லை என பதிலளித்தார்.
வயநாடு தொகுதி MP பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததற்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று முன்னரே கூறியதாகவும் ரேபரேலியில் போட்டியிடுவதை அவர் வயநாடு மக்களிடம் இருந்து மறைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பாசிச சக்திகளை அழிக்க ராகுல் ரேபரேலியில் இருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.
அரசுப் பள்ளிகளில் 6 – 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் வரும் 28ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது மாணவர்களிடம் ஆங்கில மொழியை எளிதில் கற்பிக்கும் வகையில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி&பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி பள்ளிகளில் உள்ள உயர் தர கணினி ஆய்வகங்களில் நடத்தப்பட உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவையடுத்து அங்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது அன்னியூர் சிவாவுடன் அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்பி, ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் பந்தலூர், புதுக்கோட்டை மாவட்டம் அயின்குடி ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை மாவட்டம் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
PM கிசான் திட்டத்தின் 17வது தவணை நிதியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். தகுதியுடைய ஒவ்வொரு விவசாயியின் கணக்கிலும் ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் வந்ததா? என்பதை அறிய PM Kisan இணையதளத்திற்கு சென்று KNOW YOUR STATUS என்ற ஆப்ஷனை <
கர்ப்பிணி பெண் ஊழியர் தொடர்பாக கடந்த 1961ஆம் ஆண்டு பேறுகால பலன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் பெண் ஊழியர் ஒருவர் கர்ப்பமாக உள்ளார் என்ற காரணத்திற்காக அவரை எந்த நிறுவனமும் பணிநீக்கம் செய்யக்கூடாது, அத்துமீறினால் 3 ஆண்டு சிறை எனக் கூறப்பட்டுள்ளது. 10 பேருக்கும் மேல் ஊழியர்களை கொண்ட நிறுவனம், கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஆன்லைன் முகவரியான <
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வதே ரேஷன் பொருள்கள் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்த ரேஷன் பொருளை பெறுவதற்கான குடும்ப அட்டையை நமது தாலுகா அலுவலகத்திற்கு சென்று நேரில் விண்ணப்பித்தோ அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்தோ பெறலாம். இதில் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என தெரிந்து கொள்வோம்.
Sorry, no posts matched your criteria.