News June 19, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பு மனு தாக்கல்

image

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவையடுத்து அங்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது அன்னியூர் சிவாவுடன் அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்பி, ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News

News January 23, 2026

ஜனவரி 23: வரலாற்றில் இன்று

image

*1897 – சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள். *1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. *1973 – அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வியட்நாமுடன் சமாதான ஒப்பந்தத்தை அறிவித்தார். *2004 – மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. *2005 – ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.

News January 23, 2026

ஆளுநர் உரை நடைமுறையை நீக்க வேண்டும்: CM ஸ்டாலின்

image

தமிழ்நாட்டைப் போல கேரளா, கர்நாடகாவிலும் ஆளுநர்கள் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். மாநில அரசு தயாரிக்கும் உரை படிக்க மறுப்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். மேலும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

பிரேசிலுடனான கூட்டு புதிய உச்சங்களை எட்டும்: மோடி

image

பிரேசில் அதிபர் லூலாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா-பிரேசில் இடையேயான கூட்டாண்மையில் உள்ள வலுவான முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். இந்தக் கூட்டாண்மை வரும் ஆண்டில் புதிய உச்சங்களை எட்டத் தயாராக உள்ளது. அவரை விரைவில் இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

error: Content is protected !!